ஆத்ம ஞானி
ஆத்ம ஞானி என்பவன் கர்ம யோகம், பக்தி யோகம், மற்றும் ஞான யோகம் பயின்று ஆத்ம ஞானத்தை அடைந்து தன்னிடத்திலேயே தான் மகிழ்வாக இருப்பவனையே ஆத்ம ஞானி ஆவான். தன்னை அறிந்து தன்னிடத்தில் தானே நிலை பெற்று, மனநிறைவு அடைந்தவனே ஆத்ம ஞானி ஆவான். விவேகம், வைராக்கியம், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொறுமை, அகிம்சை, சத்துவ குணம், சமாதி மற்றும் ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற இடைவிடாத ஆர்வம் எனும் முமுச்சுத்துவம் போன்ற நற்குணங்கள் பெற்றவன், சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாசனம் எனும் மூன்று படிகளைக் கடந்து பிரம்ம தத்துவத்தை அறிந்தவனையே ஆத்ம ஞானியின் இலக்கணமாகக் கூறப்படுகிறது.
அடைந்த ஞானத்தினால் ஆத்ம ஞானி பெறும் பலன்கள்
[தொகு]ஆத்ம ஞானம் அடைந்த ஆத்ம ஞானி தான் வாழும் காலத்திலேயே சீவ முக்தி எனும் மனநிறைவு பெறுகிறான். பின் தன் சட உடலை விட்டு நீங்கிய பின் (இறந்த பின்) மறு பிறப்பு இல்லாமை எனும் விதேக முக்தி அடைகிறான்.
இதனையும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- பகவத் கீதை, இரண்டாம் அத்தியாயம், சுலோகம் 56 முதல் 72 முடிய
வெளி இணைப்புகள்
[தொகு]பகவத் கீதை, இரண்டாம் அத்தியாயம் [1]