ஏரியல் சரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏரியல் சரோன்
אריאל שרון
1998இல் ஐக்கிய அமெரிக்காவில் சரோன் இசுரேலின் வெளியுறவு அமைச்சராக உரையாற்றியபோது
11வது இசுரேலின் பிரதமர்
பதவியில்
மார்ச் 7, 2001 – ஏப்ரல் 14, 2006*
குடியரசுத் தலைவர்மோஷே கத்சவ்
Deputyஎகுட் ஓல்மெர்ட்
முன்னையவர்எகுட் பராக்
பின்னவர்எகுட் ஓல்மெர்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஏரியல் ஷைநெர்மான்

(1928-02-26)26 பெப்ரவரி 1928
கஃபார் மலால், பிரித்தானிய பாலசுதீனம்
இறப்பு11 சனவரி 2014(2014-01-11) (அகவை 85)
ரமத் கான், இசுரேல்
துணைவர்(s)மார்கலித் சரோன் (1953–62; மனைவி மறைவு)
லில்லி சரோன் (1963–2000; மனைவி மறைவு)
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிஎருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்
டெல் அவிவ் பல்கலைக்கழகம்
தொழில்படைத்துறை அதிகாரி

ஏரியல் சரோன் (Ariel Sharon, எபிரேயம்: אריאל שרון‎, அரபு மொழி: أرئيل شارون‎, Ariʼēl Sharōn, பெப்ரவரி 26, 1928 – சனவரி 11, 2014) இசுரேலின் படைத்தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். தாம் பக்கவாதத்தால் தாக்கப்படும்வரை 2001இலிருந்து 2006 வரை இசுரேலின் 11வது பிரதமராகப் பணியாற்றியவர்.[1]

இளமை[தொகு]

சரோன் அப்போது பிரித்தானிய ஆளுமையில் இருந்த பாலசுதீனத்தில் கஃபார் மலாலில் பெப்ரவரி 27, 1928இல் பிறந்தார். இசுரேலியப் படைத்துறையில் பல ஆண்டுகள் பணி புரிந்தார். பல சண்டைகளில் பங்கேற்றுள்ள சரோன் 1974இல் படைத்துறைத் தலைவராக (ஜெனரல்) பணி ஓய்வு பெற்றார். பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.

அரசியல்[தொகு]

1977இல் சரோன் வேளாண்மை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1981இல் பாதுகாப்பு அமைச்சரானார். லெபனானில் நூற்றுக்கணக்கான குடிமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டால் 1983இல் அரசுப்பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இசுரேலிற்கும் பாலசுதீனத்திற்கும் இடையே போர் தொடங்கியதை ஒட்டி 2001இல் இசுரேலியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004இல் கூடிய பாலசுதீனர்கள் வாழும் காசா கரையிலிருந்து இசுரேல் வெளியேறும் என அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

உடல்நலக்கேடும் மரணமும்[தொகு]

திசம்பர் 2005 இல் சரோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சனவரி 4, 2006 அன்று மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பெரும் பக்கவாதத்தால் (மூளையில் குருதிப் பெருக்கு) பாதிக்கப்பட்டார்.

அவர் உயிரிழந்ததாக பல வதந்திகள் பரவின;அவரது மருத்துவர் இவற்றை மறுத்தார். சரோன் புதியதாகத் துவங்கிய கடிமா கட்சியின் மற்றொரு அங்கத்தினரான எகுட் ஓல்மெர்ட் பொறுப்புப் பிரதமராக தேர்தல்கள் நடைபெறும்வரை பதவியேற்றார். பின்னர் நடந்த தேர்தல்களில் வென்று ஓல்மெர்ட் இசுரேலியப் பிரதமரானார்.

சரோன் தமது 85ஆவது அகவையில் இசுரேலின் ரமத் கான் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக சனவரி 11, 2014இல் இயற்கை எய்தினார்.[2][3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Lis, Jonathan (11 சனவரி 2014). "Ariel Sharon, former Israeli prime minister, dies at 85 – National Israel News". Haaretz. http://www.haaretz.com/news/national/1.546747. பார்த்த நாள்: 11 சனவரி 2014. 
  2. "Israel mourns Sharon's passing; Netanyahu: He was a 'brave warrior'". Ha'aretz. 11 January 2014. http://www.haaretz.com/news/national/1.568006/1.568006. பார்த்த நாள்: 11 January 2014. 
  3. "Former Israeli prime minister Ariel Sharon dead at 85". Reuters. 11 January 2014 இம் மூலத்தில் இருந்து 11 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140111132837/http://www.reuters.com/article/2014/01/11/us-israel-sharon-death-idUSBREA0A09420140111. பார்த்த நாள்: 11 January 2014. 

பிற வலைத்தளங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரியல்_சரோன்&oldid=3384724" இலிருந்து மீள்விக்கப்பட்டது