சிற்பநூல்களில் நிலப்பிரிவு வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிற்பநூல்களில் நிலப்பிரிவு வகைகள் என்பது இந்தியாவின் மரபுவழிச் சிற்பநூல்களில் வீடுகள், மாளிகைகள், ஊர்கள், நகரங்கள் என்பவற்றை அமைப்பதற்கு உரியவையாகக் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான நிலப் பிரிவுகளைக் குறிக்கும். மேற்சொன்ன கட்டுமானங்களுக்கான நில வகை ஒவ்வொன்றினதும் அடிப்படை அலகு பதம் எனப்படும் நிலத்துண்டு ஆகும். இந்நிலப் பிரிவுகளில் அமையக்கூடிய பதங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வெவ்வேறு வகைகள் உருவாகின்றன. இப்பதங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தேவர்களுக்கு உரித்தாக்கப் பட்டுள்ளதுடன், அப்பதங்கள் வெவ்வேறு பயன்பாடுகளுக்காகப் பரிந்துரைக்கப்படுகின்றன. அடிப்படையில் இது ஒரு நிலப் பயன்பாட்டு ஒழுங்கு எனலாம். ஆகக்கூடிய எண்ணிக்கையாக மானசாரம் என்னும் சிற்பநூலில் ஒன்று முதல் 1024 பதங்களைக் கொண்ட 32 நிலப் பிரிப்பு வகைகள் கூறப்பட்டுள்ளன.[1] ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறான பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலப் பிரிவுகளின் முழுமையான வடிவம் சதுரம், வட்டம், முக்கோணம், பல்கோணம் எனப் பல்வேறாக அமையக்கூடும்.

வகைகள்[தொகு]

மானசாரத்தில் கூறப்பட்டுள்ள 32 வகை நிலப் பிரிவுகளினதும் அவற்றில் அடங்கும் பதங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க.[2][3]

. பெயர் பத எண்ணிக்கை
1. சகலம் ஒரு பதம்
2. பேசகபதம் 4 பதங்கள்
3. பீடபதம் 9 பதங்கள்
4. மகாபீடபதம் 16 பதங்கள்
5. உபபீடகம் 25 பதங்கள்
6. உக்கிரபீடம் 36 பதங்கள்
7. தண்டிலம் 49 பதங்கள்
8. மண்டூகம் 64 பதங்கள்
9. பரமசாயிகம் 81 பதங்கள்
10. ஆசனபதம் 100 பதங்கள்
11. தானீயம் 121 பதங்கள்
12. தேசீயம் 144 பதங்கள்
13. உபசண்டிதம் 169 பதங்கள்
14. பத்ரபதம் 196 பதங்கள்
15. மகாசனம் 225 பதங்கள்
16. பத்மகர்பம் 256 பதங்கள்
17. திரியுதம் 289 பதங்கள்
18. விரதபோகம் 324 பதங்கள்
19. கணிதபதம் 369 பதங்கள்
20. சூரியவைசாலகம் 400 பதங்கள்
21. சூசம்கிதபதம் 441 பதங்கள்
22. சூப்ரதிகாந்தம் 484 பதங்கள்
23. விசாலபதம் 529 பதங்கள்
24. விப்ரகர்பம் 576 பதங்கள்
25. விச்வேசம் 635 பதங்கள்
26. விபுலபோகம் 676 பதங்கள்
27. விப்ரதிகாந்தம் 729 பதங்கள்
28. விசாலாட்சம் 784 பதங்கள்
29. விப்ரபக்திகம் 841 பதங்கள்
30. விச்வேச்சாரம் 900 பதங்கள்
31. ஈசுவரகாந்தம் 961 பதங்கள்
32. இந்திரகாந்தபதம் 1024 பதங்கள்

குறிப்புகள்[தொகு]

  1. Gaur, Niketan Anand., 2002. பக். 20.
  2. Gaur, Niketan Anand., 2002. பக். 20,21.
  3. பவுன்துரை, இராசு., 2004. பக். 41-43.

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.
  • Acharya, Prasanna Kumar., Architecture of Manasara, Translated from Original Sanskrit Text, New Barathiya Book Corporation, Delhi, 2010.
  • Gaur, Niketan Anand., Stapatya Ved-Vastu Sastra - Ideal Homes, Colony and Town Planning, New Age Books, New Delhi, 2002.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]