நீலிமா ராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலிமா ராணி
பிறப்பு6 நவம்பர் 1983 (1983-11-06) (அகவை 40)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1992 - அறிமுகம்
சமயம்இந்து

நீலிமா ராணி (Neelima Rani, பிறப்பு: நவம்பர் 6, 1983)[1] இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சின்னத்திரை நடிகையாவார். இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.

தொழில்[தொகு]

இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். தொலைக்காட்சியிலிருந்து சற்று விலகி அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

சின்னத்திரையில்[தொகு]

  • 2002-2005 மெட்டி ஒலி
  • 2003-2007 தற்காப்பு கலை தீராதா
  • 2003-2009 கோலங்கள்
  • 2005-2007 என் தோழி என் காதலி என் மனைவி
  • 2008 புதுமை பெண்கள்
  • 2009-2012 தென்றல்
  • 2010-2012 இதயம்
  • 2012 பவானி
  • 2009-2013 செல்லமே
  • 2013- மகாபாரதம்

இது முழுமையானது அல்ல.

திரைப்படம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-01. பார்க்கப்பட்ட நாள் 2018-01-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலிமா_ராணி&oldid=3560930" இலிருந்து மீள்விக்கப்பட்டது