வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கி, பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது. மேர்கூரித் திட்டம், ஜெமினித் திட்டம் ஆகிய வற்றைத் தொடர்ந்து, அப்பல்லோ திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது ஆளேற்றிய விண்பறப்புத் திட்டமாகும். அப்பல்லோ, ஐசனோவருடைய நிர்வாகத்தில், மேர்க்கூரித் திட்டத்தின் தொடர்ச்சியாக, உயர்நிலை பூமிச்சுற்று ஆய்வுகளுக்காக, உருக்கொடுக்கப்பட்டது. பின்னர், மே 25, 1961ல், அமெரிக்கக் காங்கிரசின் விசேட கூட்டு அமர்வில், ஜனாதிபதி கெனடியால் அறிவிக்கப்பட்டபடி, தீவிர நிலவில் இறங்கும் நோக்கத்துக்காக மாற்றியமைக்கப்பட்டது.