ஏ. கே. வேலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. கே. வேலன்
பிறப்பு24 அக்டோபர் 1921 (1921-10-24) (அகவை 102)
ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பெற்றோர்அருணாசலம் பிள்ளை - இராமாமிர்தம் அம்மையார்
வாழ்க்கைத்
துணை
ஜெயலட்சுமி

ஏ. கே. வேலன் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஏ.கே. வேலனின் இயற்பெயர் அ.குழந்தைசாமி என்பதாகும். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடி எனும் கிராமத்தில் அருணாசலம் பிள்ளை - இராமாமிர்தம் அம்மை தம்பதிகளுக்கு மகனாக 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 24ல் பிறந்தார்.

ஈ.வே.ராமசாமியின் அழைப்பினை ஏற்று தனது பள்ளி ஆசிரியர் பதவியை துறந்து திராவிட இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். அத்தருணத்தில் எரிமலை எனும் நாளேட்டினை நடத்தியமையால், ஏ.கே.வேலன் என்று தனது பெயரினை மாற்றிக் கொண்டார். கந்தசாமிபிள்ளை என்பவரின் மகள் ஜெயலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை 16-6-1952ஆம் நாள் பிறந்தது.[2]

இயற்றியுள்ள நூல்கள்[தொகு]

  1. அனுமார் அனுபூதி
  2. எழுத்துக்கள்
  3. கண்ணன் கருணை
  4. காவியகம்பன்
  5. மேரியின் திருமகன்
  6. நாடகங்கள்
  7. வரலாற்றுக் காப்பியம்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-71.htm திரு.கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
  2. திராவிடநாடு (இதழ்) நாள்:29-6-1952, பக்கம் 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._வேலன்&oldid=2616248" இலிருந்து மீள்விக்கப்பட்டது