பாரிசு (கிரேக்கர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிளுடன் இளவரசன் பாரிசு - எர்மன் பிசென், நி கார்ல்சுபெர்க் கிளைப்டோடெக், கோபனாவன்
பாரிசின் தீர்ப்பு - ரூபென்ஸ்

பாரிசு, (Paris) அல்லது அலெக்சாந்திரோசு (Alexandros) கிரேக்கத் தொன்மவியலில் ஓர் முக்கிய நபராகும். திராயன் போரிலும் ஓமரின் இலியட்டிலும் முதன்மையான பங்கு உடையவன்.

அலெக்சாந்திரோசு (பாரிசு) திராயின் மன்னன் பிரையமிற்கும் அரசி எகூபாவிற்கும் மகனாகப் பிறந்தவன். பிறந்த குழந்தையால் திராய் அழிவுறும் என்ற குறிமொழிகளால் அச்சமுற்ற மன்னன் தன் மகன் விலங்குகளால் உயிரிழக்க காட்டில் விட்டான். ஆனால் அக்குழந்தையை மற்றொருவன் கண்டெடுத்து பாரிசு எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.

மூன்று தேவதைகளுக்குள் தங்களில் யார் அழகு என்றெழுந்த பிணக்கில் தீர்ப்பு வழங்கப் பணிக்கப் பட்டான். தன்னை அழகானவளாக தெரிந்தெடுத்தால் உலகிலேயே மிகவும் அழகிய ஹெலனை பெற்றுத் தருவதாக வாக்களித்த அப்ரடைட்டியே அழகானவளாக தீர்ப்பளிக்கிறான். இதனால் மெனெலசுவைத் திருமணம் செய்து கொண்டு எசுபார்த்தாவின் அரசியாக விளங்கிய ஹெலனை ஒரு தந்திரம் செய்து தன்னுடன் கூட்டிச் செல்கிறான். இதுவே திராயன் போர் மூள முதன்மைக் காரணமாக அமைந்தது.

பாரிசு ஒரு நஞ்சூட்டப்பட்ட அம்பினை அச்சிலிசின் கால்களில் எய்து உயிரிழக்க வைக்கிறான். இறுதியில் பிலோக்டெடெசால் கொல்லப்படுகிறான்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிசு_(கிரேக்கர்)&oldid=2712949" இலிருந்து மீள்விக்கப்பட்டது