நாட்டாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  கிராமம்  —
அமைவிடம்
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பஞ்சாயத்து தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

நாட்டாணி என்னும் கிராமம் தஞ்சைக்கு மேற்கே சுமார் 20கிமீ தொலைவில் அமைந்துள்ளது. எனினும் இது புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டத்தைச் சார்ந்தது. முற்றிலும் இயற்கை சூழலோடு அமைந்துள்ள இக்கிராமத்தில் விவசாயமும் கூலியுமே முதன்மையான தொழில்கள்.

மக்கள்[தொகு]

சுமார் 200 குடும்பங்களை கொண்ட இக்கிராமத்தில் இரண்டு சமுதாய மக்களே வாழ்கின்றனர். கள்ளர் சமுதாய மக்களும் பறையன் சமுதாய மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றர். சுற்றுவட்ட கிராமங்களோடு நல்லிலக்கணத்தோடும் மரியாதையோடும் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

இந்த ஊரில் பிறந்த ச. சு. பழனிமாணிக்கம் இந்திய அரசில் நடுவண் இணை அமைச்சராக இருந்துள்ளார்[3]. கள்ளர் சமுதாயத்தில் 'வன்னியர்' என்ற பட்டப் பெயர் கொண்டவர் இவர்.

சுற்றுலாத்தலம்[தொகு]

இந்த கிராமத்தில் "அணை" அமைந்திருக்கிறது, இது சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மாறி வருகிறது.

கோயில்கள்[தொகு]

பண்டைய சோழர் நாடான இங்கு நான்குபுறமும் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கிராமத்தில் காவல் தெய்வமாக 'கருப்பையாவும் மதுரை வீரனும்' வணங்கப்படுகிறார்கள். படத்தளத்தியம்மன், முருகன் திருக்கோயில்கள் இங்கு உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://tamil.oneindia.in/news/2009/05/28/tn-central-ministers-from-tn-and-puducherry.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டாணி&oldid=1580423" இலிருந்து மீள்விக்கப்பட்டது