பயனர் பேச்சு:Vbmbala

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Vbmbala, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:54, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரை[தொகு]

சிறப்பாகக் கட்டுரை எழுதியுள்ளீர்கள். நான் தங்கள் கட்டுரையில் செய்த மார்ரங்களைப் பார்க்கவும். அது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஏதும் சத்தேகம் இருப்பின் என் பேச்சுப் பக்கத்தில் வினவலாம். பங்களிப்பைத் தொடருங்கள்.நன்றி--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:59, 16 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

-தோழரே என்னால் படிமத்தை பதிவேற்றும் இனைப்பை காண இயலவில்லை , உதவவும் Vbmbala
இங்கு பதிவேற்றலாம். பார்க்க [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Upload இதை கிளிக் செய்யவும்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:01, 16 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]


- இந்தக் கோப்பைப் பதிவிறக்கவும்-க்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:

நீங்கள் கோரிய செயற்பாடு தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள், நிர்வாகிகள், உறுதிசெய்யப்பட்ட பயனர்கள் குழுக்களுள் ஒன்றின் பயனர்களுக்கு மட்டுமே.

இந்த செய்தியை காண்பிக்கிறது உறுதிசெய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் என்றால் அவர்களுக்கு நான் எவ்வாறு இந்த படிமத்தை அனுப்புவது அல்லது நான் அந்த தகுதியை எப்படி பெருவது

http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:படிமம்_தரவேற்றம்

--நந்தகுமார் (பேச்சு) 08:47, 16 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

மேலுள்ள இணைப்பில் வழிகாட்டலைப் பெறுங்கள்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:47, 16 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இணைப்பு சுழல் மின்னாக்கம்[தொகு]

இணைப்பு சுழல் மின்னுற்பத்தி நிலையம் கட்டுரையை ஏதாவது நூலில் இருந்து பார்த்து எழுதுகிறீர்களா என்று அறிய விருப்பம். அதன் நடை ஒரு பாடநூல் நடை போல அமைந்துள்ளது. --Surya Prakash.S.A. (பேச்சு) 06:40, 16 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நண்பா , என் பெயர் பாலமுருகன் ,நான் திட்டமிடும் பொறியாளராக(planning Engineer) சவுதியில் இணைப்பு சுழல் மின் உற்பத்தி நிலைய-Combined cycle power plant கட்டுமானத்தில் பனிபுரிந்து வருகிறேன் , இந்த கட்டுரை சில புத்தகங்களை Refer செய்து எழுதியுள்ளேன் , ஆனால் இது எந்த புத்தகத்தையும் அப்படியே copy செய்யபடவில்லை , அனைவருக்கும் புரியும் வண்ணம் power pointல் modeling செய்து கொண்டு வருகிறேன் முடிந்ததும் பதிவேற்றம் செய்கிறேன் திருத்தங்கள் இருந்தால் கூறவும்

எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் , திருத்தவும்.

நீங்கள் திட்டப் பொறியாளரா? எனக்கு அதில் நிறைய சந்தேகம் உள்ளது. தேவைப்படும்போது கேட்டுக் கொள்வேன்.

வாழ்த்துக்கள் பாலா! கூடிய வரையிலும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துங்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கேட்கலாம். எந்த நேரத்திலும் உதவக் காத்திருக்கிறோம். உங்கள் கருத்துகள், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:07, 16 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்கு உதவ கத்து இறுக்குறேன் , எனக்கு இரு சந்தேகங்கள்

1. ஏன்னால் படிமத்தையும் , நான் உருவக்கிய modeling கோப்பயும் எனது கட்டுரைக்கு உள்ளே கொண்டு வர முடியவில்லை இந்தக் கோப்பைப் பதிவிறக்கவும்-க்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:நீங்கள் கோரிய செயற்பாடு தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள், நிர்வாகிகள், உறுதிசெய்யப்பட்ட பயனர்கள் குழுக்களுள் ஒன்றின் பயனர்களுக்கு மட்டுமே. இந்த செய்தியை காண்பிக்கிறது உறுதிசெய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் என்றால் அவர்களுக்கு நான் எவ்வாறு படிமத்தை அனுப்புவது அல்லது நான் அந்த தகுதியை எப்படி பெருவது

நீங்கள் உருவாக்கிய படிமம் என்றால் அதனை விக்கிமீடியா பொதுவகத்தில் தரவேற்றுவதே (தரவிறக்குவது அல்ல) நல்லது. இந்த இணைப்பை]ச் சொடுக்குங்கள். படிமத்தை தரவேற்றிய பின்னர் அப்படிமத்தை நேரடியாகத் தமிழ்க் கட்டுரையில் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 11:45, 16 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

2. Gas turbine என்று ஆங்கிலத்தில் தேடும் போது அதைப்பற்றிய விளக்கம் தமிழில் வருகிறது ஆணால் combined cycle power plant என்று தேடும் போது அதைப்பற்றிய ஏன் கட்டுரை வரவில்லை இணைப்பு சுழல் மின் உற்பத்தி நிலையம் என்று தேடும் போது தான் வருகிறது , இதற்கு உதவுங்கள்.

உங்கள் இரண்டாவது சந்தேகம்: குறிப்பிட்ட கட்டுரை இன்று தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தேடுதலில் அகப்பட சில நாட்கள் செல்லும். ஒரு வாரமும் ஆகலாம். ஆனாலும் கூகுளில் தேடும் போது உடனடியாகக் கிடைக்க வாய்ப்புண்டு.--Kanags \உரையாடுக 10:50, 16 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்கினால் அது விக்கி, கூகுள் தடல்களில் அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் வந்துவிடும் என்றார் நம் முன்னால் பயனர் பாலா.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:15, 17 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
சிறப்பாகக் கட்டுரை உருவாக்குவதைக்கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்! ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10:21, 22 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


-பாலா :- மிக்க நன்றி.
நீங்கள் உங்கள் கையொப்பத்தை ~~~~ பயன்படுத்தி இடலாம். முயன்று பார்க்கவும். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:46, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Vbmbala!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--Anton·٠•●♥Talk♥●•٠· 14:53, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:12, 4 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஏற்கனவே உள்ள கட்டுரைகள்[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்பை நல்க வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் ஒரு கட்டுரையை ஆரம்பிக்க முன்னர், அந்தக் கட்டுரை தமிழ் விக்கியில் ஏற்கனவே உள்ளதா, இல்லையா என்பதை ஒருதடவை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆங்கில விக்கியில் குறிப்பிட்ட கட்டுரைக்கு இணையான பக்கத்திற்குச் சென்று, அங்கே தமிழ் விக்கிக்கு இணைப்புள்ளதா என்பதைப் பார்ப்பதன் மூலம் பொதுவாக இதனை அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே இருக்கும் ஒரு கட்டுரையை நீங்கள் வேறு பெயரில் ஆரம்பித்தால், அவற்றை இணைக்கும் வேலை புதிதாகச் சேர்ந்துகொள்ளும். அதனைத் தவிர்த்தல் நல்லது.

மேலும் நீங்கள் எழுத விரும்பும் ஒரு கட்டுரை ஏற்கனவே இருந்தால், அந்தக் கட்டுரையையே நீங்கள் விரிவாக்கலாம், அல்லது திருத்தங்களைச் செய்யலாம். நன்றி.--கலை (பேச்சு) 22:11, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]

உயிர்பிழைப்புத் திறமைகள் கட்டுரையை தப்பிப்பிழைத்தல் திறன்கள் (Survival skills) கட்டுரையுடன் இணைத்து விட்டேன். ஆனால், உயிர்பிழைப்புத் திறமைகள் கட்டுரையை நீக்கத் தெரியவில்லை. எனவே , கட்டுரையை நீக்கி உதவவும்.
உடனடியாகத் தகவல்களை இடம்மாற்றி கட்டுரைகளை இணைக்க வழிசெய்தமைக்கு நன்றி பாலா. உயிர்பிழைப்புத் திறமைகள் கட்டுரையை நீக்கவில்லை. மாறாக, இரு கட்டுரைகளையும் அவற்றின் வரலாற்றுடன் சேர்த்து இணைத்துவிட்டு, உயிர்பிழைப்புத் திறமைகள் கட்டுரையில் ஒரு வழிமாற்றியை விட்டிருக்கின்றேன். தப்பிப்பிழைத்தல் திறன்கள் கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். இவ்வாறு வரலாற்றுடன் சேர்த்து கட்டுரைகளை இணைத்தலை நிருவாகிகள் செய்ய முடியும் என்பதால், இரு கட்டுரைகளிலும் உள்ள தகவல்களை எல்லாம் ஒரு கட்டுரையில் இணைத்துவிட்டு, பயனர்களின் தொகுப்புக்கள் எதுவும் மறந்துபோகாமல் பாதுகாக்கலாம்.
பேச்சுப் பக்கங்களில் நீங்கள் தொகுப்புக்களைச் செய்யும்போது, உங்கள் கையொப்பத்தையும் இட்டீர்களென்றால், கருத்துக்களைப் புரிந்து கொள்ளல் இலகுவாக இருக்கும். தொகுப்புப் பெட்டியின் மேலுள்ள கருவிப்பட்டையில் மூன்றாவது பொத்தானை அழுத்தி உங்கள் கையொப்பத்தை இடலாம். மேலும் உங்கள் பயனர் பக்கத்திலும் சில குறிப்புக்களை இடலாமே. :)--கலை (பேச்சு) 11:10, 11 சனவரி 2014 (UTC)[பதிலளி]


அறிவியல் துறை கட்டுரைகள்[தொகு]

வணக்கம், Vbmbala!

தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் தமிழ் கட்டுரைகள் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியலைத் தமிழுக்கும், தமிழ் பேசுவோருக்கு அறிவியலையும் எடுத்துச்செல்வதில் உங்கள் பங்களிப்பு உதவியாக அமையும். கலைச்சொற்கள் உதவி தேவைப்படின் கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். தமிழ் உசாத்துணைகள் உதவி தேவை எனின் :உசாத்துணைப் பக்கத்தில் கேக்கவும். உங்களுக்கு ஈடுபாடு இருக்கக் கூடிய மேலதிக இணைப்புகள்:

--Natkeeran (பேச்சு) 20:32, 3 பெப்ரவரி 2014 (UTC)

படிமம்[தொகு]

படிமம்:Terrestial Planets internal en-2.jpg என்ற படிமத்தில் ஒட்டுப்பகுது என்றிருப்பது ஒட்டுப்பகுதி என்றிருக்க வேண்டும். மேலும், இவ்வாறான பொதுவகத்தில் ஆங்கிலத்தில் உள்ள படிமங்களைத் தமிழ்ப்படுத்தினால், அவற்றைப் பொதுவகத்தில் தரவேற்றுவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 11:09, 22 மார்ச் 2014 (UTC)

விக்கியிடை இணைப்புகள்[தொகு]

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு (இருப்பின்) மறக்காமல் விக்கியிடை இணைப்புகளை ஏற்படுத்திவிடுங்கள். பார்க்க: உதவி:விக்கியிடை இணைப்புகள் --AntonTalk 06:27, 8 ஏப்ரல் 2014 (UTC)

உங்கள் கவனத்திற்கு[தொகு]

விக்கி வாக்கிய அமைப்புகளில் இடைவெளி (space) விடவேண்டிய முறைகளில் உங்கள் கவனத்திற்காகச் சில குறிப்புகள்:

  • கேட்டை விண்மீன் , -தவறு
கேட்டை விண்மீன், -சரி
  • பிரகாசமாக உள்ளது.மேலும்மிகப் பெரியது -தவறு
பிரகாசமாக உள்ளது. மேலும் மிகப் பெரியது -சரி
  • கேட்டை விண்மீன்(Antares) -தவறு
கேட்டை விண்மீன் (Antares) -சரி

இந்தச் சிறுசிறு குறிப்புகளை உங்களது பங்களிப்பின் போது கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:44, 14 ஏப்ரல் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Vbmbala!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:33, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 16:54, 11 சனவரி 2015 (UTC)[பதிலளி]

டெல்பினசு இந்த பக்கத்தை மேலும் மொழியர்த்து உதவுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 09:43, 31 மார்ச் 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:26, 14 சூலை 2015 (UTC)[பதிலளி]

படிமம்[தொகு]

வணக்கம், Vbmbala!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


நியாயப் பயன்பாட்டுப் படிமங்களின் மாத்திரம் இங்கு பதிவேற்றுங்கள். ஏனையவற்றை பொதுவகத்தில் பதிவேற்றுங்கள். நன்றி. --AntanO 08:32, 8 மார்ச் 2016 (UTC)

நியாயப் பயன்பாட்டுப் படிமங்களின் மாத்திரம் இங்கு பதிவேற்றுங்கள். சமூக வலைத்தளங்களில் உள்ளவற்றை இங்கு பதிவேற்ற வேண்டாம். காப்புரிமை தொடர்பில் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் நீங்கள் தடை செய்யப்படலாம். --AntanO 04:38, 9 மார்ச் 2016 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vbmbala&oldid=3185127" இலிருந்து மீள்விக்கப்பட்டது