புதுச்சேரி அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுச்சேரி அருங்காட்சியகம் புதுச்சேரி அரசின் கலை பண்பாடு துறையின் கீழ் உள்ளது. கிமு இரண்டாம் நூற்றண்டுலிருந்து செழுமையுடன் விளங்கிய "பொதுகே" என பண்டைய கிரேக்க ரோம நிலா இயல் வல்லுனர்களால் அறியப்பட்ட பண்டியை துறைமுகமான புதுவை, பல பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் மக்களின் சங்கமத்தை கொண்டது.

வரலாறு[தொகு]

1673 ஆம் ஆண்டு பிரெஞ்ச்கரர்களின் வருகைக்கு முன் இப்பகுதி பல்லவர்கள் ,சோழர்கள் ,விஜயநகர மன்னவர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் அவர்கள் ஆட்சிகுட்பட்ட பகுதியாக விளங்கியது. இங்கு உள்ள வரலாற்று காலத்திற்கு முற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் பாகூர், திருபுவனை, திருவண்டர்கோவில், மதகடிபட்டு, வில்லியனூர் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்று சின்னங்களில் இருந்தும், மற்றும் அரிக்கமேடு, சுட்டுகேணி, முத்திரையர்பாளையம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து கிடைத்துள்ள பழமையான சான்றுகளின் அடிப்படையில், இப்பிரதேசம் உன்னத கலை மற்றும் கலாச்சாரத்தின் உரைவிடமாகத் திகழ்ந்து வந்து உள்ளது என்பது தெரிய வருகிறது. புதுவை அருங்காட்சியகம் 1983ஆம் ஆண்டு மார்ச் மேடம் 25 ஆம் தேதி திறக்கபட்டது. தற்போது அருங்காட்சியகம் அமைக்க பட்டு உள்ள இடம் நூற்றாண்டு பழமை உடையது. இது 18ஆம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பிரெஞ்சு வில்லா ஆகும். பிரெஞ்சு வணிகர் கார்வல்ஹோ உடைய வீடாக இருத்தது. சுதந்திரதிற்கு பிறகு இது சட்டம் மற்றும் கல்விதுறைக்கு உரிய கட்டமாக இருந்தது. 1998இல் சீர் செய்யப்பட்டு அருங்காட்சியகம் ஆகா மாற்றபட்டது.

திறந்திருக்கும் நேரம்[தொகு]

  • காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை
  • மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை
  • அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள் விடுமுறை

சிற்ப அரங்கு[தொகு]

இந்த அரங்கில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த பல இடங்களில் இருந்து கண்டு எடுகபட்ட பல்லவ மற்றும் சோழர் காலத்தை சேர்ந்த சில சிற்பங்கள் காட்சியில் வைக்கபட்டுள்ளன.
கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஓம்கார்சுந்தரியார் அல்லது மகிஷசூரமர்தினி மற்றும் சுப்பிரமணியர் (எம்பலம் பகுதியில் கண்டு எடுக்கபட்டது )போன்ற முற்கால பல்லவ சிற்பங்கள், சங்ககால புத்தர் தலை (கிருமாம்பாக்கம் பகுதியில் கண்டு எடுக்கபட்டது), பிற்காலத்தில் நந்தி (மதகடிபட்டு பகுதியில் கண்டு எடுக்கபட்டது), தட்சனாமூர்த்தி, சூரியதேவர், லிங்கோத்பவர், உமாமகேச்ஸ்வரர், பைரவர் மற்றும் அம்மன் (இவை அனைத்தும் கரைகளில் உள்ள மாதூர் என்ற கிராமத்தில் இருந்து கிடைத்தவை)ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் பிரிவு[தொகு]

2000 வருடங்களுக்கு முன்பு புதுவை செழுமையாக இருந்தது .புதுவை துறைமுக பகுதியாக இருந்த பொது (பொதுகே என்று ரோமர்களால் அறியப்பட்டது பாதி உலகோடு சிறப்பாக வாணிபம் செய்து வந்தது .அரிக்கமேடு என்று அழைக்கப்பட்ட பழைய நகரத்தின் இப்பகுதி புதுவையின் தென்பகுதியில் உள்ளது (அருகன்மேடு அல்லது அருகுமேடு -அடிக்கடி கடல் அரிப்பினால் பதிக்கப்பட்ட பகுதி. அரிக்கமேட்டில் அகழ்துந்து எடுக்கப்பட்ட ரோமானியா பானை ஓடுகள் (அரெத்தைன் மற்றும் ரௌலெட்டெ ஓடுகள் ) பலவகைப்பட்ட உள்நாட்டு பானை ஓடுகள் .கருப்பு சிவப்பு ,கருப்பு -சிவப்பு நிற ஓடுகள் .பிராமி எழுதுக்கள் அமைந்த ஓடுகள் ,அலங்கார ஓடுகள் காட்சியில் வைக்கப்பட்டுஉள்ளன .மது உலர்ந்து கெட்டியான துகள்களுடன் கூடிய யவன மாடு சதியின் பகுதிகள் .கண்ணாடி ,சங்கு தந்தம் ஆகியவற்ரால் ஆன மணிகள், சங்கு வளையல்கள் , சுடுமண் காதணிகள் ,தொங்கல்கள்mவிளையாட்டுச்சாமான்கள்,இடைதரக் கற்கள் (செவ்வந்தி ,கொமேதகம் மற்றும் வெண் பளிங்கு ) கிரேக்க சின்னம் அமைந்த படிக்கல் ,செங்கற்கள் ,அடுப்பு மற்றும் ஓடுகள் காட்சிக்கு வைகபட்டுஉள்ளன.கண்ணாடி மணிகள் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உருக்குகளம், கற்கருவிகள் ,மரசுத்தி, சுடுமண் பொம்மைகள் முதலியவையும் வைகபட்டுள்ளன தொன்மைக்கால இருபிடம்களில் இருந்து (முத்துரையர்பாளையம் ,பிள்ளயற்குப்பம் மற்றும் பாகூர் )கிடைத்துஉள்ள முதுமக்கள் தாழிகளும் ,பெரும்கற்கால ஈமபானைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுஉள்ளன.செஞ்சி கோட்டை வீரர்களின் குழந்தைகள் விளையாடிய கோலிக்குண்டுகள் .

செப்பு திருமேனி அரங்கு[தொகு]

புதுவை மற்றும் கரைக்கால் பகுதிகளில் பூமிக்கு அடியில் இருந்து புதையல்லாக கிடைக்க பெற்ற மிக அருமையான செப்பு திருமேனிகள் இந்த அரங்கை அலங்கரிகின்றன இங்குள்ள நடராசர் ,உமா மகேஸ்வரி அம்மன் (திருவண்டர்கொவில் என்னும் இடத்தில் கண்டு எடுக்கபட்டது) எழில் கொஞ்சும் திரிபுராந்தகர் மற்றும் திரிபுரசுந்தரி (கரைக்கால் பகுதியுள் உள்ள சுரகுடி என்னும் இடத்தில் கண்டு எடுக்க பட்டது )ஆகிய பஞ்சலோக சிலைகள் சோழர் கால ஸ்தபதிகளின் கலைத்திறன் பறை சாற்றுவணவாக உள்ளன .விஜயநகர் மற்றும் நாயகர் காலத்திய உருவ சிலைகளும் உள்ளன.

போக்குவரத்து அரங்கு[தொகு]

உயர் வகுப்பினர் பயன் படுத்திய போக்குவரத்துக்கு வாகனகள் இவ்வரங்கில் வைக்கபட்டுஉள்ளன.

புஸ்புஸ் வண்டி :புஸ்புஸ் வண்டி[1] என்பதில் புஸ்புஸ் என்னும் பிரெஞ்சு வார்த்தைக்கு தள்ளு தள்ளு என்பது பொருள். இந்த வண்டி 19 ஆம் நூற்றாண்டை சேர்த்தவை என கூறபடுகிறது.மேலும் 19 ஆம் நூற்றாண்டில் புதுவையில் உபயோகத்தில் இருந்தது. பின்பக்கத்தில் இருந்து ஆட்கள் தள்ளும்போது வண்டியில் அமர்ந்திருப்பவர் கைபிடியை பிடித்து கொண்டு ஓட்டிசெல்வார் .இந்த தள்ளுவண்டியை திரு .குழந்தை தைரியநாதன் குடும்பத்தினர் இந்த அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளனர்.

கோச் வண்டி :19 ஆம் நூற்றாண்டில் குதிரை இழுத்துஇச்சென்ற இந்த வண்டியை திரு.குழந்தை தைரியநாதன் குடும்பத்தினர் இந்த அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளனர்.

பல்லக்கு :நீடராஜப்பையர் பிரெஞ்சு கவர்னருக்கு திவானாக பணிபுரிந்த காலத்தில் .அவர் தம் பயணத்திற்கு பயன்படுத்திய பல்லகினை இவ்வரங்கில் காணலாம்.இது 18-19 ஆம் நூற்றாண்டை சார்ந்தது .

மாட்டு வண்டி :20 ஆம் நூற்றாண்டின் இடைகலத்தில் இந்த மாட்டு வண்டி புதுச்சேரிஇல் உபயோகத்தில் இருந்தது .இந்த மாட்டு வண்டி இரட்டை மாடுகளின் உதவியுடன் இயக்கபட்டது .இந்த மாட்டு வண்டி முழுவதும் மரத்தால் செய்யப்பட்டது .சித்தன்குடியில் உள்ள திரு இளம்பூர்ணம் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியது

நாணய பிரிவு[தொகு]

பிரெஞ்சு 1 ருபாய் 1938
பிரெஞ்சு 1 ருபாய் 1938

இங்கு பிரெஞ்சு நானயங்கள்,பிரெஞ்ச்க் குடிஎற்ற நாடுகளின் நானயங்கள்,,உலக நானயங்கள்,பிரித்தானிய நானயங்கள் பிரித்தானிய குடிஎற்ற நாடுகளின் நானயங்கள்,இந்திய நானயங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்க பட்டு உள்ளன கி மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பஞ்ச் மார்கெட் நானயங்கள் மிக பழமையானது இங்கு உள்ளது பிரெஞ்சு களத்தை சேர்ந்த ஐந்து ருபாய் மற்றும் ஒரு ருபாய் நோட்டுகள் காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன .இவை இந்தோ-சீனா வங்கியின் மூலம் வெளிஇடபட்டது.புதுவை என்ற எழுத்துகளும் எடம் பெட்டரு உள்ளது .இந்த நோட்டுகலில் அங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி எழுத்துகளும் உள்ளன.

பிரெஞ்சிந்திய அரங்கு[தொகு]

முதல் தலத்தில் அமைகைபட்டுள்ள பிரெஞ்சு இந்திய அரங்கு புதுவை தவிர வேறு எங்கும் காண இயலாத ஒன்று .பிரெஞ்சுகாரர்கள் புதுவையில் வாழ்ந்த பொது அவர்கள் பயன் படுத்திய பொருட்கள் இவ்வரங்கில் வைக்க பட்டு உள்ளன.

  • பிரெஞ்சுகவர்னர் துப்ளெக்ஸ் அவர்கள் பயன் படுத்திய கட்டில்.
  • 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இருகால்கள் மட்டும் கொண்ட சுவரை அணைத்த படி நிற்கும் மேஜை.
  • 1760 களில் புதுச்சேரி இன் மாதிரி வரைபடம் .
  • கவர்னர் டூப்ளெக்ஸ் சிலை (1697–1763)15-1-1742 முதல் 13-8-1754 வரை புதுச்சேரிஇன் கவர்னராக இருந்தார்
  • மரியாள் சிலை (சமத்துவம் ,சகோதரத்துவம் ,தன்னாட்சி உரிமை

தெரிவிப்பதாக உள்ளது

  • பிரெஞ்சிந்திய காலத்து தட்டுடச்சு கருவி
  • அந்தோனியோ கரெகியா வரைந்த தானே ஓவியம்
  • அரிக்கமேடு பற்றிய புகைப்படம் .
  • உலக வரலாற்று வரைபடம் ( உலக வரலாற்று பற்றிய வரிசையான சம்பவப்பட்டியல் 4000 கிமு முதல் )
  • அரிக்கமேடு இல் செய்யப்பட்ட கல் மணி 200 கிமு முதல் 200 கிபி வரை
  • அரிக்கமேடு இல் செய்யப்பட்ட கண்ணாடி மணி
  • டெரகோட்ட வில் செய்யப்பட்ட காது அணிகலன்கள் முதலாம் நூற்றாண்டை சேர்ந்தது .
  • கல் கோடாரி புதிய கற்காலத்தை சேர்ந்தது
  • கை கோடரி கற்காலம் சேர்ந்தது
  • கல் கருவிகள் புதிய கற்காலத்தை சேர்ந்தது
  • ரோமானிய பேரரசின் நாணயங்கள் வெள்ளியால் செய்ய பட்டவை
  • கிருஷ்ணா ஐய்யர் அவர்களால் பனை ஓலைகளில் எழுதப்பட்ட கையெழுத்து பிரதி இல் அருணகிரிபுராணம் .
  • முதலாம் ஸ்ரீ ரங்கராயர் கொடுக்கப்பட்ட செப்பு பட்டயம் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது .
  • முது மக்கள் தாழி அதன் இருக்கையுடன்
  • முதலாம் நூற்றாண்டை சேர்ந்த செங்கல் அரிக்கமேடுஇல் அகழ்வாராச்சி இன் போது கண்டு எடுக்கபட்டது .
  • பழகாலத்து புட்டி (amphora )மற்றும் அவற்றின் துகள்கள்
  • தமிழ் பிராமி எழுத்துகள் பொரிக்க பட்ட பொருட்கள்
  • ரோமர்கள் பயன்படுத்திய ஒயின் சீசாகளின் துகள்கள்

படகாட்சிகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]