ஹால் விளைவு உணரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கு காற்றால் இயங்கக் கூடிய உருளையில் இருக்கும் காந்த உந்து தண்டு(1) முழுவதும் நீட்டப் படும் போதும் குறுகும் போதும் வெளிச் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் ஹால் விளைவு உணர்விகள்(2 and 3) மின்னழுத்தத்தைக் கொடுக்கும்.
ஹால் விளைவு உணரி கொண்ட ஓர் உரசிணைப்பி
மின்சுற்று வரைபடத்தில் பரவலாக பயன்படும் குறியீடு

ஹால் விளைவு உணரி என்பது காந்தப் புலத்தைப் பொறுத்து வெளியீட்டு மின்னழுத்தத்தை மாற்றக் கூடிய ஒரு வகை ஆற்றல்மாற்றி ஆகும். ஹால் விளைவு உணரிகள் ஒரு பொருளின் இருப்பிடத்தை அறிதல் (location), பொருள் அண்மையில் உள்ளதா (proximity) என்பதை அறிதல், வேகத்தை அறிதல், மின்சாரத்தை உணர்தல் போன்ற பயன்பாடுகளில் பயன்படுகிறது.

மின்னூட்டம் கொண்ட துகள்களின் கற்றையானது (beam) காந்தப்புலத்தின் வழியே செல்லும் போது, துகள்களின் மீது செயல்படும் விசை அதன் பாதையின் திசையை மாற்றும். இதுவே ஹால் விளைவு உணரியின் அடிப்படைத் தத்துவமாகும். ஹால் விளைவு உணரியில் மின் கடத்தியின் வழியே செல்லும் எதிர்மின்னிகள் மின்னூட்டம் கொண்ட ஒரு கற்றையாகச் செயல்படுகின்றன.

பயன்கள்[தொகு]

  • ஹால் விளைவு உணரியை மின்விசைச் சாவியாகப்(electromechanical switch) பயன்படுத்த முடியும்..
  • இதன் விலை மற்ற மின்னியக்க சாவிகளை விடக் குறைவு.
  • மற்ற மின்னியக்க சாவிகளில் ஒரே ஒரு தொடர்பு(contact) மட்டுமே இருக்கும். இவை தொடர்பின் போது சில சமயங்களில் தொடர்பை விட்டு விலகி விடும். ஹால் விளைவு உணரியில் தொடர்ச்சியான பல தொடர்புகள் இருக்கும். எனவே இதைச் சாவியாக உபயோகப் படுத்தும் போது தொடர்பில் இருந்து விலகுவது இல்லை.
  • மாசுக்களால் பாதிப்பு அடைவது இல்லை. எனவே இதனை கடினமான நிலைகளிலும் பயன்படுத்தக் கூடும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹால்_விளைவு_உணரி&oldid=2746131" இலிருந்து மீள்விக்கப்பட்டது