மாவட்ட வருவாய் அலுவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவட்ட வருவாய் அலுவலர் (District Revenue Officer) மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் பணியாகும். இவர் வருவாய்த்துறையின் அனைத்துச் செயல்பாடுகளையும் கவனிக்கிறார். மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறையில் இருக்கும் போதும், மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியில் யாரும் நியமிக்கப் படாத நிலையிலும், இவர் மாவட்ட ஆட்சித்தலைவர் பணியைக் கூடுதலாகக் கவனிப்பார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பிற்கு வருவாய்த்துறையில் பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர்கள் அந்தந்த மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். நிலம் சார்ந்த பிணக்குகளைத் தீர்வு காணவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கவனிப்பதற்காகவும் இவருக்கு மாவட்ட நீதித்துறை முதன்மை நடுவர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க[தொகு]

மாவட்ட ஆட்சி அமைப்பு

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவட்ட_வருவாய்_அலுவலர்&oldid=3415275" இலிருந்து மீள்விக்கப்பட்டது