மாவட்ட நூலக அலுவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவட்ட நூலக அதிகாரி

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நூலக அதிகாரி எனும் பொறுப்பில் ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் மாவட்டத்தில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நூலகங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் பணியை செய்து வருகிறார். மேலும் நூலகங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க அந்த ஊர்களின் முக்கியப் பிரமுகர்களை புரவலர்களாக்கி அவர்களிடம் நன்கொடையாகப் பணம் பெற்று அதன் மூலம் நூலக வாசகர்களுக்கு மேலும் சில வசதிகளைச் செய்து கொடுக்கிறார்.மேலும், உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வசூலிக்கப்படும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலக வரியாகும், எனவே, அந்த நூலக வரியை சம்பந்தப் பட்ட அமைப்புகளிடமிருந்து வசூல் செய்து அந்த தொகை மூலம் நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள், தளவாடங்கள், நாளிதழ், பருவ இதழ் மற்றும் நூலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்கிறார்.   

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவட்ட_நூலக_அலுவலர்&oldid=2927050" இலிருந்து மீள்விக்கப்பட்டது