விக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோக்கம்[தொகு]

ஈரோடு பகுதியைச்சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தினை நிகழ்த்த உள்ளது.

நிகழிடம்[தொகு]

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

நாள், நேரம்[தொகு]

13.12.2013 அன்று 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

நிகழ்ச்சி நிரல்[தொகு]

வரவேற்புரை: முனைவர். ப. கமலக்கண்ணன் , துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை.
பயிலரங்கத்தை தொடங்கி வைத்து வாழ்த்துரை: முனைவர். ச. சரவண பாபு, முதல்வர், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி.
சிறப்புரை: பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ்நாடு.

பயிலரங்கப்பொருண்மைகள்[தொகு]

இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சியை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி அளிக்க உள்ளார்.

இந்நிகழ்வில் பங்கேற்க[தொகு]

இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை தமிழகம் என்னும் வலைதளத்தில் பதிவு செய்து, பயிலரங்கில் பங்கேற்கலாம். இப்பயிலரங்கம் குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர், பதிவு செய்ய விழைவோர் +91-9750933101, +91-9443517659 ஆகிய எண்ணிகளைத் தொடர்பு கொள்ளலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே நிகழ்வில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும். நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் அளிக்கும் தகவல்கள் நிகழ்வு மேலாண்மைக்கு மட்டுமே பயன்படுத்தப்பெறும், அத்தகவல்களின் இரகசியம் காக்கப்பெறும்.

கலந்து கொள்வோர்[தொகு]

  1. 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 00:56, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
  2. S ELAMARAN 9787302211

வெளி இணைப்புகள்[தொகு]

  1. தின மணி செய்தி
  2. தமிழகம்.வலை அறிவிப்பு
  3. விக்கி செய்தியில்