பகுப்பு பேச்சு:உடற்கூற்றியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடல் பகுதியை கூறு போட்டு பார்க்கும் இயல், உடற்கூறியல் ஆகும். ஆனால், இங்கு உடல் பகுதியை 'கூற்றுகளாக' என்றால், 'விவரங்களாக' என்ற பொருளை மட்டுமே குறிக்கிறது. அது பகுப்பு: தாவர அமைப்பியல்‎ என்பதாகும். கூறுபோட்டு பார்த்தல் என்றால், உள்ளே அறுத்து பார்த்து விவரித்தல். எனவே, உடற்கூறியில் என்பதே பொருந்தும்.மேலும், காண்க : வார்ப்புரு:உடற்கூறியல் --≈ உழவன் ( கூறுக ) 17:57, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இது உடலின் கூறுகளைப் பற்றிய இயல். எனவே உடற்கூறு + இயல். இங்கே வல்லொற்று இரட்டித்தல் என்பதற்கு அமைவாக "உடற்கூற்றியல்" என்றே வரும். வரலாறு + இல் --> வரலாற்றில், சோறு + இல் ---> சோற்றில் போன்றவையும் இப்படியே. வரலாறில், சோறில் என்று வராது. ---மயூரநாதன் (பேச்சு) 19:25, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]