பெரியாண்டிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியாண்டிச்சி என்பது தமிழ்நாட்டில் வன்னியர், குலாலர் பிரிவினரால் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும்.

பிற சமூகத்தைச் சார்ந்த சில பிரிவினரும் இத் தெய்வத்தை வழிபடுகின்றனர். இது ஒரு பெண் தெய்வம் ஆகும். படுக்கை நிலையில் வானத்தைப் பார்த்தவாறு பெண் உருவத்தை மண்ணால் செய்து அதனைப் பெரியாண்டிச்சியாக வழிபடுகின்றனர் மேலும் இத்தெய்வத்தின் கையில் கத்தி, சூலம், கபாலம், உடுக்கை ஏந்திய நிலையில் உள்ளார். இத்தெய்வத்திற்கு ஆடு, சேவல், பன்றி ஆகியவற்றைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம். சேலம் மாவட்டத்திலும் , தருமபுரி மாவட்டத்திலும் அதிகமாக பெரியாண்டிச்சி கோயில்கள் உள்ளன. இக் கோயில்கள் பெரும்பாலும் சுடுகாடுகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளன. இத்தெய்வத்தின் முக்கியமான உருபெற்ற தலம் மேல்மலையனூரில் உள்ளதுவரலாறு


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாண்டிச்சி&oldid=3781987" இலிருந்து மீள்விக்கப்பட்டது