யூதேயப் பாலைவனம்

ஆள்கூறுகள்: 31°42′N 35°18′E / 31.700°N 35.300°E / 31.700; 35.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கெதரோன் சமவெளியில் மார் சபா

யூதேயப் பாலைவனம் (Judaean Desert, எபிரேயம்: מִדְבַּר יְהוּדָה‎, Midbar Yehuda அரபு: صحراء يهودا) என்பது கிழக்கு எருசலேம் முதல் சாக்கடல் வரை இசுரேலும் மேற்குக் கரையிலும் உள்ள ஓர் பாலைவனமாகும். இது வடகிழக்கு நெகேவ் முதல் கிழக்கு பெய்ட் எல் வரை நீண்டு, பாறைச்சரிவுகளின் மேல் காணப்படுகின்றது. இதன் செங்குத்தான சரிவு சாக்கடலிலும் யோர்தான் சமவெளியிலும் முடிவடைகிறது. யூதேயப் பாலைவனம் வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வரை பல சிறு சமவெளிகளைக் கடக்கின்றது. அதில் பல சிறு செங்குத்துப் பள்ளத்தாக்குகள் காணப்படுகின்றன. அவற்றில் பல ஆழம் மிக்கவையாகவும், கிழக்கில் 600 அடியிலிருந்து மேற்கில் 1,200 அடி வரை வரை காணப்படுகின்றன.[1] யூதேயப் பாலைவனம் கிழக்கு யூதேய மலையுடன் சிறப்பு வடிவ அமைப்பியல் கொண்ட ஒன்றாகும்.

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Judaean Desert
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதேயப்_பாலைவனம்&oldid=3309552" இலிருந்து மீள்விக்கப்பட்டது