வடிவமைப்புக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடிவமைப்புக் கொள்கை என்பது, கலைப் பொருள் ஒன்றின் உருவாக்கத்தில், வடிவமைப்புக் கூறுகளின் தெரிவு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன தொடர்பில் உள்ளார்த்தமாக அமைந்துள்ள சில பண்புகளில் ஏதாவதொன்றைக் குறிக்கும். ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை போன்ற கலைகளில் இக் கொள்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது தொடர்பான கட்டுரைகளிலும் நூல்களிலும் தரப்படுகின்ற இக் கொள்கைகளும் அவற்றின் எண்ணிக்கையும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. சில பொதுவான கொள்கைகள் பின்வருமாறு:

ஒரு கலை ஆக்கத்தில் இவை உரிய முறையில் அமையும்போது, அப் பொருட்கள் காட்சிக்கு இனியனவாக அமைகின்றன. இவை கையாளப்படும் விதமே ஒரு கலைப்பொருளின் அழகியல் பெறுமானத்துக்குக் காலாக அமைகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவமைப்புக்_கொள்கை&oldid=2593299" இலிருந்து மீள்விக்கப்பட்டது