படநாயர்குளங்கரை மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படநாயர்குளங்கரை மகாதேவர் கோயில்
படநாயர்குளங்கரை மகாதேவர் கோயில் is located in கேரளம்
படநாயர்குளங்கரை மகாதேவர் கோயில்
படநாயர்குளங்கரை மகாதேவர் கோயில்
ஆள்கூறுகள்:9°30′5″N 76°35′5″E / 9.50139°N 76.58472°E / 9.50139; 76.58472
பெயர்
மலையாளம்:പടനായർകുളങ്ങര മഹാദേവക്ഷേത്രം
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கொல்லம்
அமைவு:கருநாகப்பள்ளி
கோயில் தகவல்கள்
மூலவர்:பரமசிவன்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில், கருநாகப்பள்ளி என்னும் ஊரில் உள்ளது படநாயர்குளங்கரை மகாதேவர் கோயில். பரசுராமனால் பிரதிஷ்டிக்கப்பட்டதாக நம்புகின்றனர். [1] கேரளத்தின் 108 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று..

வரலாறு[தொகு]

ஆய் அரசனின் ஆட்சிக்குட்பட்டிருந்த இந்தப் பகுதி, பின்னர், ஓடநாட்டின் ஒருபகுதியாகவும், திருவிதாங்கூரின் ஒரு பகுதியாகவும் இருந்தது. காயங்குளம் அரசர்களின் தலைமையகம் சிலகாலம் இங்கிருந்தது. அக்காலத்தில் புத்தத் தலமாக இருந்ததாகவும், பின்னர் இந்து தலமாக மாறியதாகவும் கூறுகின்றனர். கேரளத்தில் பள்ளி என்று பெயரில் உள்ள ஊர்கள் பலவும், முன்னர் புத்த கோயில்களைக் கொண்டிருந்தன எனவும், பின்னர் அவை இந்து சமய தலங்களாகின எனவும் தெரிகின்றது. [2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. குஞ்ஞிகுட்டன் இளையவர் எழுதிய “108 சிவத்தலங்கள்” என்ற நூலில் இருந்து
  2. கேரளத்தில் கோயில் வரலாறுகள் , கேரள இலக்கிய அக்காதமி - வி. வி. கே வாலத்து