மைக்கோபேக்டீரியம் இலெப்புரோமட்டோசிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கோபாக்டீரியம் இலெப்புரோமட்டோசிசு
Mycobacterium lepromatosis
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வரிசை:
துணைவரிசை:
Corynebacterineae
குடும்பம்:
Mycobacterium
பேரினம்:
இனம்:
M. lepromatosis
இருசொற் பெயரீடு
Mycobacterium lepromatosis

மைக்கோபாக்டீரியம் இலெப்புரோமட்டோசிசு (Mycobacterium lepromatosis) என்னும் பாக்டீரியமும் மைக்கோபாக்டீரியம் இலெப்ரே (Mycobacterium leprae) என்னும் பாக்டீரியமும் தொழுநோய் அல்லது ஃகான்சனின் நோய் (Hansen's disease) எனப்படும் நோயை உண்டாக்குகின்றன. இந்த மைக்கோபாக்டீரியம் இலெப்புரோமட்டோசிசு என்னும் பாட்டீரியத்தை 2008 இல் தான் முதலில் கண்டுபிடித்தார்கள்[1]. இதன் 16S பகுதி இரிபோசோம் ஆர்.என்.ஏ மரபணுவை அலசியதில் இது மைக்கோபாக்டீரியம் இலெப்ரே என்னும் பாக்டீரியத்தில் இருந்து வேறானது என்பது உறுதியாயிற்று.[2]

மை. இலெப்புரோமட்டோசிசு (M. lepromatosis) விரவும் இலெப்புரோமட்டோசிசு தொழுநோய் ("DLL") உண்டாக்கும் ஒரு காடிக் குலையாத வகை குச்சி நுண்ணுயிரி (Acid Fast Bacilli (AFB)[3]. இந்த விரவுவகை இலெப்புரோமட்டோசிசு தொழுநோய் பெரும்பாலும் மெக்சிகோ, கரிபிய நாடுகளில் காணப்படுகின்றது[4]. விரவு இலெப்புரோமட்டோசிசு தொழுநோய் நரம்புவழி ஊடுருவி தோலில் புண் ஏற்பட்டு வெளிப்படும் கடுமையான ஒரு நோய்.[5] . மைக்கோபாக்டீரியம் இலெப்ரே போலவே இதுவும் செய்முறைச் சாலையில் வளர்ப்பூடகத்தில் வளர்க்க முடியவில்லை, ஏனெனில் இந்த நுண்ணுயிரிக்குத் தேவையான சில மரபணுக்கள் உயிர் உடலங்களிதான் கிடைக்கின்றன[6]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Han, X. Y., Seo, Y. H., Sizer, K. C., Schoberle, T., May, G. S., Spencer, J. S., Li, W., Nair, R. G. "A new Mycobacterium species causing diffuse lepromatous leprosy". Am. J. Clin. Pathol. 2008 Dec;130(6):856-64.
  2. Han, X. Y., Sizer, K. C., Thompson, E. J., Kabanja, J., Li, J., Hu, P., Gómez-Valero, L., Silva, F. J. "Comparative sequence analysis of Mycobacterium leprae and the new leprosy-causing Mycobacterium lepromatosis". J. Bacteriol. 2009 Jul 24.
  3. Xiang Y. Han, Yiel-Hea Seo, Kurt C. Sizer, Taylor Schoberle, Gregory S. May, John S. Spencer, Wei Li, and R. Geetha Nair “A New Mycobacterium Species Causing Diffuse Lepromatous Leprosy.” American Journal of Clinical Pathology. AJCP 2008 130:856-864. http://ajcp.ascpjournals.org 15 Nov. 2011.
  4. http://emedicine.medscape.com/article/1104977-overview
  5. Xiang Y. Han, Yiel-Hea Seo, Kurt C. Sizer, Taylor Schoberle, Gregory S. May, John S. Spencer, Wei Li, and R. Geetha Nair “A New Mycobacterium Species Causing Diffuse Lepromatous Leprosy.” American Journal of Clinical Pathology. AJCP 2008 130:856-864. http://ajcp.ascpjournals.org 15 Nov. 2011.
  6. New bacterium just as deadly". USA Today (Society for the Advancement of Education). FindArticles.com. 15 Nov, 2011. https://archive.today/20120708042615/findarticles.com/p/articles/mi_m1272/is_2765_137/ai_n31371071/ 15 Nov. 2011