வண்ணார்பண்ணை நடேசர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீராவியடி கடைச்சாமி ஒழுங்கை வண்ணார்பண்ணை ஸ்ரீ நடேசர் கோவில் ஈழத்தில் ஞான குருபரம்பரையை ஏற்படுத்திய கடையிற் சுவாமியாரால் இது சிதம்பரமடா என்று முன்மொழிந்த இடத்தில் உள்ள ஒரு கோயில். சிதம்பரத்துப் பாணியில் 1920 இல் இவ்வாலயம் கட்டப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களால் பூசித்த விநாயகரும் இக்கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலமூர்த்தி சிவகாமசுந்தரி சமேத நடேசப் பெருமாள். பரிவார மூர்த்திகள் - விநாயகர், வைரவர் ஆகியோர். தினமும் இருகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. நடேசப் பெருமானிற்கு ஆறு அபிஷேகங்களும் விசேடமாக நடைபெற்று வருவதுடன். சிவராத்திரி நாயன்மார் குருபூசை என்பனவும் விசேட வழிபாட்டுக்குரிய தினங்களாகக் கொண்டாப்பட்டு வருகின்றன.

உசாத்துணை[தொகு]

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்