சென்னை வானிலை ஆய்வு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை வானிலை ஆய்வு மையம்
துறை மேலோட்டம்
அமைப்புஏப்ரல் 1 1945
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
அமைப்பு தலைமை
  • ஒய்.இ.ஏ. ராஜ், துணைத் தலைமை இயக்குனர்
மூல அமைப்புஇந்திய வானிலை ஆய்வு மையம்
கீழ் அமைப்பு
வலைத்தளம்சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று. தென்னிந்திய தீபகற்பத்தைச் சேர்ந்த ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களிலும், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வானிலை சம்மந்தப்பட்ட செயற்பாடுகளை இது கவனித்து கொள்கிறது. மற்ற மண்டல மையங்களின் தலைமையகம் கொல்கத்தா, குவஹாத்தி, மும்பை, நாக்பூர், மச்சிலிப்பட்டணம் மற்றும் புது தில்லியில் உள்ளன.[1]

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சென்னை வானிலை ஆய்வு மையம் கிழக்கில் உள்ள முக்கியமான மையமாக கருதப்படுகிறது.[2]

வரலாறு[தொகு]

செயல்பாடுகள்[தொகு]

மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை நுழைவுவாயில் தோற்றம்

சென்னை, வானிலை ஆய்வு மையமானது நுங்கம்பாக்கத்தில் கல்லூரிச்சாலையில் குட் செப்பர்ட் பள்ளி மற்றும் கிறித்துவ பெண்கள் கல்லூரி ஆகியவற்றுக்கிடையில், பழைய எண் 50 (புதிய எண்.6) என்ற இடத்தில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில், ஐதராபாத், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமையப்பெற்றுள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த வானிலை ஆய்வு மையங்கள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சேவையாற்றி வருகின்றன.

மற்ற சேவைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About IMD". india-water.com. Archived from the original on 2012-03-28. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2013. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. Lazarus, Susanna Myrtle (22 August 2013). "The origins of the weatherman in Madras". தி இந்து (சென்னை: தி இந்து). http://www.thehindu.com/news/cities/chennai/the-origins-of-the-weatherman-in-madras/article5045891.ece?homepage=true. பார்த்த நாள்: 23 அக்டோபர் 2013.