நற்கருணை ஆசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்ஜியத்தில் உள்ள ஒரு கர்மேல் சபைத்துறவு மடத்தில் நற்கருணை ஆசீர் நடைபெறுகின்றது

நற்கருணை ஆசீர் (ஆங்கில மொழி: Benediction of the Blessed Sacrament) என்பது கிறித்தவ பக்தி முயற்கிகளுள் ஒன்றாகும். இதில் ஒரு குருவோ அல்லது திருத்தொண்டரோ நற்கருணை ஆராதனையின் முடிவில் கதிர்ப்பாத்திரத்தில் உள்ள நற்கருணையினைக் கொண்டு மக்களுக்கு ஆசீ வழங்குவார். இவ்வழக்கம் கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டுமுறை, சில ஆங்கிலிக்க மற்றும் லூதரனிய திருச்சபைகள் மற்றும் சில மரபுவழி சபைகளில் உள்ளது.[1]

வழிபாட்டுமுறை[தொகு]

1973இல் Rite of Eucharistic Exposition and Benediction என்னும் ஆவணம் இயற்றப்படும் வரை எவ்வகை சட்டமும் இவ்வழிபாட்டினைக்குறித்து இல்லை. எனினும் திருத்தந்தை பன்னிரண்டாம் கிளமெண்டின் ஆட்சியில் ரோமை மறைமாவட்ட முதன்மை குரு புரோஸ்பேரோ லாம்பெர்தினியால் (பின்னாளில் திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்) வெளியிட்ட வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டன.

நற்கருணை ஆசீருக்கு முன்பு நிகழும் ஆராதணையில் "மாண்புயர்" அல்லது அதனை ஒத்த ஒரு பாடல் பாடப்படுவது வழக்கம்.

தற்போது நடப்பில் உள்ள வழக்கப்படி நற்கருணை ஆசீருக்கு முன் தூபமிடுவதும்[2] அதற்குறிய உடைகளை அணிவதும் குருக்களுக்கும் திருத்தொண்டர்களுக்கும் கட்டாயமாக்கப்படுள்ளது.[3] மேலும் குருக்களையும் திருத்தொண்டர்களையும் தவிர பிறர், நற்கருனையினை ஆராதணைக்காக அதனை வெளிக்காட்ட சிறப்பு அனுமதி பெற்றிருப்பினும், நற்கருணை ஆசீர் அளிக்க இயலாது.[4] நற்கருணை ஆசீர் முடிந்தவுடன் நற்கருணை, நற்கருணை பேழையில் வைக்கப்பட வேண்டும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Congregation for Divine Worship, Holy Communion and Worship of the Eucharist outside of Mass, 91". Archived from the original on 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-22.
  2. "Congregation for Divine Worship, Holy Communion and Worship of the Eucharist outside of Mass, 93 and 97". Archived from the original on 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-22.
  3. "Congregation for Divine Worship, Holy Communion and Worship of the Eucharist outside of Mass, 92". Archived from the original on 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-22.
  4. "Congregation for Divine Worship, Holy Communion and Worship of the Eucharist outside of Mass, 91". Archived from the original on 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-22.
  5. "Congregation for Divine Worship, Holy Communion and Worship of the Eucharist outside of Mass, 100". Archived from the original on 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்கருணை_ஆசீர்&oldid=3560267" இலிருந்து மீள்விக்கப்பட்டது