அப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பிள்ளை
இயற்பெயர்பிரணாதார்த்திகரர்
தத்துவம்விசிஷ்டாத்வைதம்
குருமணவாள மாமுனிகள்

அப்பிள்ளை புகழ்பெற்ற வைணவ உரையாசிரியர். பிரணாதார்த்திகரர் எனும் இயற்பெயருடைய இவர் வைணவ ஆச்சாரியனாகிய மணவாள மாமுனிகளின் மாணவராவார்.[1]

குருவை அடைதல்[தொகு]

அப்பிள்ளார் மற்றும் அப்பிள்ளை ஆகியோர் தலயாத்திரையாக திருவரங்கம் வந்தடைந்த நேரமும், மணவாள மாமுனிகளின் புகழ் எங்கும் பரவதொடங்கிய காலமும் ஒத்திருந்தது. மாமுனிகளின் புகழை கேள்வியுற்றும் அவர்மீது பெரிய அபிமானம் ஏதும் கொள்ளாது அப்பிள்ளை தன் குழாத்தோடு திருவரங்கத்திலேயே சிறிதுகாலம் வீற்றிருந்தார். அச்சமயத்தில் மிகுந்த ஞானவான்களான கந்தாடையண்ணன், எறும்பியப்பா போன்றோர்கள் மாமுனிகளுக்கு சீடர்களானது அப்பிள்ளைக்கும் அப்பிள்ளார்க்கும் மிகுந்த வியப்பைக் கொடுத்ததோடு இல்லாமல் மாமுனிகளைக் காணவேண்டும் என்ற ஆவலை தூண்டியது. எறும்பியப்பா அப்பிள்ளார்க்கு மிகுந்த பரிச்சயமானவர் என்பதால் அவரைக் காணும் விதமாக திருவரங்க மடத்தை அடைந்த அப்பிள்ளார் எறும்பியப்பா மூலமாக மாமுனிகளின் பெருமைகளை உணர்ந்ததோடு வானமாமலை சீயர் மூலமாக மாமுனிகளிடம் தன் குழாத்தோடு சீடரானார். பின்னாளில் மாமுனிகளால் அமைக்கப்பெற்ற அஷ்ட திக் கஜம் எனும் எட்டுப்பேர் அடங்கிய குழுவில் அப்பிள்ளையும் ஒருவரானார்.

இலக்கியப் பணி[தொகு]

  • இயற்பாவில் உள்ள அனைத்து திருவந்தாதிகளுக்கும் விளக்கவுரை
  • திருவிருத்தத்தின் முதல் 15 பாடல்களுக்கு விளக்கவுரை
  • யதிராஜ விம்சதிக்கு விளக்கவுரை
  • வாழி திருநாமங்களுக்கு விளக்கவுரை

சிறப்பு[தொகு]

  • மணவாளமாமுனிகளின் அஷ்ட திக் கஜம் எனும் அழைக்கப்படும் எட்டுப் பேரில் ஒருவர் ஆவார்.

தனியன்[தொகு]

மணவாளமாமுனிகளுக்கு அந்தரங்க சீடராகவும் மாமுனிகளின் பல வியாக்யானங்களில் உறுதுணையாகவும் விளங்கிய அப்பிள்ளை அவர்களை போற்றும் வடமொழி தனியன்:

காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும்

மேற்கோள்கள்[தொகு]

  1. magizhmaran (2016-08-17). "அப்பிள்ளை". guruparamparai thamizh. பார்க்கப்பட்ட நாள் 2023-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பிள்ளை&oldid=3692758" இலிருந்து மீள்விக்கப்பட்டது