பாக்பேன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்பேன்
பாக்பேன் திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்மோசன் மக்மால்பஃப்
தயாரிப்புமோசன் மக்மால்பஃப்
இசைபால் கோலியர், சாலர் சமாடி
நடிப்புரிவிரா எனோ, பவுலா அசாடி, குல்லாயும் ஞாகறேர், ட்ஜெரியா ட்ஜ்டெண்டெரொ ஜுஸ்காடோ, இயான் டேவிட் ஹுவாங், பால் குமாரி குருவாங்
ஒளிப்பதிவுமோசாம் மக்மால்பஃப்
படத்தொகுப்புமோசாம் மக்மால்பஃப்
வெளியீடுஅக்டோபர் 2012
ஓட்டம்87 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து, இஸ்ரேல்
மொழிஆங்கிலம், பாரசீக மொழி

தி கார்டனர் (The Gardener) (பாரசீக மொழி: باغبان ) என்று பரவலாக அறியப்பட்ட பாரசீக மொழித் திரைப்படமான பாக்பேன், மோசன் மக்மால்பஃப் இயக்கிய ஈரானியத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காஆகிய இடங்களின் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றுள்ளது. மேலும் ஒரு ஈரானிய இயக்குனரால் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படம் இதுவரை 20 ற்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று சிறந்த கலைப்படம் என்ற விருதை குரோசியாவின் திரைப்பட விழாவில் வென்றது. பெய்ருட் திரைப்படவிழாவில் விருது பெற்றது.[1] நியூயார்க் க்ரிட்டிக் சர்கிள் அமைப்பால் பாராட்டப்பட்தது.[2] மும்பைத் திரைப்பட விழாவில் சிறந்த 10 திரைப்படங்களுள் இதுவும் ஒன்று என பாராட்டப்பட்டது.[3]

கதை[தொகு]

இத்திரைப்படமானது உலகில் மதத்தின் தாக்கம் பற்றி அறிந்து கொள்ள ஈரானிய இயக்குனர் ஒருவர் தனது மகனுடன் இஸ்ரேல் சென்று வருகிறார். இதை ஒட்டி எடுக்கப்பட்டதே இத்திரைப்படமாகும்.

நடிகர்கள்[தொகு]

  • பப்புவா நியூ கினியைச் சேர்ந்த ரிவிரா எனோ ( Ririva Eona Mabi)
  • கனடாவைச் சேர்ந்த பவுலா அசாடி (Paula Asadi)
  • ருவாண்டாவைச் சேர்ந்த குல்லாயும் ஞாகறேர் (Guillaume Nyagatare)
  • அங்கோலாவைச் சேர்ந்த ட்ஜெரியா ட்ஜ்டெண்டெரொ ஜுஸ்காடோ (Tjireya Tjitendero Juzgado)
  • தைவானைச் சேர்ந்த இயான் டேவிட் ஹுவாங் (Ian David Huang)
  • நேபாளைச் சேர்ந்த பால் குமாரி குருவாங் (Bal Kumari Gurung)

விளைவுகள்[தொகு]

இப்படத்தினால் ஏற்பட்ட சர்ச்சைகள் பெரிய அளவில் உலகெங்கும் பேசப்பட்டன.

பிபிசி[தொகு]

இப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் மக்மல்பஃப்-ன் சர்ச்சைக்குரிய படம் இது என குறிப்பிட்டது.

ஈரானிய ஊடகங்கள்[தொகு]

அதிகாரபூர்வமாகவும் அதிகாரபூர்வமற்றும் ஈரானிய ஊடகங்கள் இத்திரைப்படத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டன. அவரை சர்ச்சைக்குரிய இயக்குனர் (fugitive filmmaker) என விமர்சித்தன.[4] பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மக்மால்பஃப் நடுவராக இருந்த திரைப்பட விழாச் செய்திகளில் மக்மால்பஃப்-ன் பெயரைச் சொல்லாமல் எதிர்ப்பைத் தெரிவித்தன.[5] தன்னை மேற்குலக சக்திகளிடம் விற்றுவிட்டார் (பணத்திற்காக விலை போனார்) எனக் குற்றம் சாட்டின.[6]

இஸ்ரேல் பயணம்[தொகு]

ஈரானியர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல அனுமதி இல்லை. மீறிச் சென்றால் 5 வருட சிறைத் தண்டனை.[7] ஆனால் மக்மல்பஃப் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் சென்று திரைப்பட விழாவில் இத்திரைப்படத்தைத் திரையிட்டார். ஈரானில் அவருக்கு ஆதரவைவிட எதிர்ப்பே அதிக அளவில் இருந்தது[8].[9] ஆனால் இஸ்ரேலிய ஊடகங்கள் அவரது வருகைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.[10] அத்திரைப்பட விழாவில் அவரது திரைப்படத்தின் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. பிபிஸி தொலைக்க்காட்சிப் பேட்டியில் மக்மால்பஃப், புறக்கணிப்பு ஒருபோதும் மக்களின் மனதை மாற்றாது. பேசுவது தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வழி" என்றார்.[11]

ஈரானிய அருங்காட்சியகம்[தொகு]

மக்மால்பஃப் இஸ்ரேல் சென்றதால் இவரின் அனைத்துப் படங்களும் ஈரான் திரைப்பட அருங்காட்சி ஆவணத் தொகுப்பிலிருந்து அகற்றப்பட்டன.

விருதுகள்[தொகு]

இத்திரைப்படம்,

  • கொரியத் திரைப்பட விழா
  • யூரோப்பியன் ப்ரீமியர் திரைபட விழா
  • நெதர்லாந்து திரைப்பட விழாவின் வாழ்நாள் விருது
  • மாஸ்கோ திரைப்பட விழா
  • லெபனான் திரைப்பட விழா
  • குரேசியா திரைப்பட விழா
  • இந்தியத் திரைப்பட விழா

ஆகியவற்றில் சிறப்பு கவனமும் விருதுகளையும் பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "film school in London". London Film Academy. பார்க்கப்பட்ட நாள் 2013-03-23.
  2. http://www.nyfcc.com/2013/08/critics-pick-of-the-week-the-gardener-reviewed-by-armond-white-for-cityarts/
  3. http://www.thegardenerfilm.com/awards/
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-21. பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-08. பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.
  6. http://translate.google.com/translate?hl=en&sl=fa&u=http://www.baharoom.ir/fa/bahairesearch/news/325/%D9%85%D8%AD%D8%B3%D9%86-%D9%85%D8%AE%D9%85%D9%84%D8%A8%D8%A7%D9%81-%D8%A8%D8%A7%D8%BA%D8%A8%D8%A7%D9%86-%D8%A7%D9%81%D8%AA%D8%AE%D8%A7%D8%B1%DB%8C-%D8%A8%D9%87%D8%A7%D8%A6%DB%8C%D8%AA---%D8%AF%D8%A7%D9%86%D9%84%D9%88%D8%AF&prev=/search%3Fq%3D%25D8%25A8%25D8%25A7%25D8%25BA%25D8%25A8%25D8%25A7%25D9%2586%2B%25D9%2585%25D8%25AD%25D8%25B3%25D9%2586%2B%25D9%2585%25D8%25AE%25D9%2585%25D9%2584%25D8%25A8%25D8%25A7%25D9%2581%26safe%3Doff%26biw%3D1151%26bih%3D623
  7. "Iran increases jail penalty for travel to Israel". Digitaljournal.com. 2011-11-15. பார்க்கப்பட்ட நாள் 2013-03-23.
  8. "Open Letter to Filmmaker Mohsen Makhmalbaf: Please Be a Messenger of Freedom for Iranian and Palestinian People". Jadaliyya. Arab Studies Institute. பார்க்கப்பட்ட நாள் 12 July 2013.
  9. http://www.radiofarda.com/archive/news/20130718/143/143.html?id=25050483
  10. http://www.thenation.com/article/176228/salaam-cinema-mohsen-makhmalbaf
  11. http://www.youtube.com/watch?v=NW_NKHNNeho&feature=share&list=UUHZk9MrT3DGWmVqdsj5y0EA
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்பேன்_(திரைப்படம்)&oldid=3562527" இலிருந்து மீள்விக்கப்பட்டது