மதனகல்யாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதனகல்யாணி சண்முகானந்தன்
பிறப்புஅக்டோபர் 5, 1938 (1938-10-05) (அகவை 85)
புதுச்சேரி, தமிழ்நாடு,  இந்தியா
தொழில்எழுத்தாளர்
வகைமொழிபெயர்ப்பு

மதனகல்யாணி சண்முகானந்தன் (5-10-1938 புதுச்சேரி - மே, 2023) என்பவர் பிரெஞ்சு-தமிழ், தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், தமிழாசிரியர் ஆவார். இவர் பிரெஞ்சுமொழியைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக்குரிய பல சான்றிதழ்கள் பெற்றவர். பிரெஞ்சுக்காரர்கள் பலருக்குத் தமிழ் மொழியையும் தமிழர்கள் பலருக்குப் பிரெஞ்சு மொழியையும் பயிற்றுவித்தவர். பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் செவியாக் உள்ளிட்டவர்களுக்குப் பேச்சுத் தமிழ் பயிற்றுவித்த பெருமைக்குரியவர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் என இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்தவர். வருகை தரு ஆசிரியராகப் பல நிறுவனங்களில் பணிபுரிந்தவர். லிசே பிரான்சே பள்ளியில் 41 ஆண்டுகள் தமிழ் பயிற்றுவித்தவர். பணிபுரிந்தவர்.

குடும்பம்[தொகு]

மதனகல்யாணி காவல்துறை ஆணையர் செ. கிருட்டினசாமி, கி. இராசாம்பாள் தம்பதிகளின் ஐந்து புதல்வர்களில் ஒருவர். ஓய்வு பெற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரி த. சண்முகானந்தனின் மனைவி. இவருக்கு மூன்று குழந்தைகள். மதனகல்யாணி 2023 மே மாதம் இறந்தார்.[1]

கல்வியும் பணியும்[தொகு]

  • பக்காலோரேயா (BACCALAURÉAT) DIPLÖME DE BACHELIER DE L’ENSEIGNEMENT SECONDAIRE (UNIVERSITY OF PARIS)) - 1958 (பாரிஸ்பல்கலைக்கழகம்)
  • புலவர் தமிழ் - 1974 (சென்னை பல்கலைக்கழகம்)
  • முதுகலை பிரெஞ்சு (MASTER OF ARTS: FRENCH )- 1974 - (கர்நாடகப் பல்கலைக்கழகம் : தார்வார்)
  • கணினி பயிற்சி (INITIATION A WINDOW 95 - WORD 95 - Agence pour l’enseignement français à l’étranger) - 1997

பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த நூல்களில் சில[தொகு]

  • குட்டி இளவரசன் (அன்த்துவான் தெ சேன்த் எக்சுய்பேரி)
  • கொள்ளைநோய் (நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர்ட் கம்யூஸ்)
  • புதுச்சேரி வணிகத்தள ஊரின் வரலாறு (ழெரார் துய்வால்)

தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழி பெயர்த்த நூல்களில் சில[தொகு]

  • புதுச்சேரி நாட்டுப் புறப்பாடல்கள்
  • புதுச்சேரி நாட்டுப்புறக் கதைகள்
  • கரையெல்லாம் செண்பகப்பூ (சுஜாதா)
  • கம்பனோடு ஒன்றும் பிரஞ்சிலக்கியங்கள்
  • ஆராதனை (கவிதை நூல்)
  • தூறல் (கவிதை நூல்)
  • சிலப்பதிகாரம்

ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழி பெயர்த்த நூல்களில் சில[தொகு]

  • Les aspects de la culture Tamij (The aspects of Tamil culture by Dr. KOTHANDARAMAN, Former Vice - Chancellor of Chennai University)

விருதுகளும் பட்டங்களும்[தொகு]

பிரெஞ்சுக்காக[தொகு]

  • செவாலியே (CHEVALlER DANS L’ ORDRE DES PALMES ACADEMIQUES) - 2002 (France)
  • Diplôme de MENTION SPECIALE : L’ACADEMIE DE PROVENCE- 1995 - France
  • PRIX D’HONNEUR : L’ACADEMIE DE PROVENCE- (France) 1995- புதுச்சேரி நாட்டுப்புறக்கதைகள் (பிரெஞ்சு)
  • PREMIER ACCESSIT : Grand Concours littéraire International - 1999, L’ACADÉMIE …DE PROVENCE- FRANCE.

தமிழுக்காக[தொகு]

  • மணிக்கவி மஞ்ஞை - பாராட்டு நன்மங்கலம் - உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம். 1992
  • சிறந்த எழுத்தாளர் விருது - 1996 - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - புதுச்சேரி மாநிலக்கிளை
  • தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை - நற்சான்றிதழ் - மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் மாநாடு - 2002 கோலாலம்பூர்(மலேசியா),
  • பாராட்டிதழ் - தமிழ்ப்புதுவை -1996- புதுச்சேரி
  • பாவேந்தர் நூற்றாண்டு விழா சான்றிதழ் - 1990 - புதுச்சேரி
  • பாராட்டிதழ் - புதுவை எழுத்தாளர் சங்கம். மனித உரிமை மற்றும் உயர்வுறுதல் சங்கம். மக்கள் காப்புரிமை மாத இதழ் - 1999 - புதுச்சேரி
  • பாராட்டிதழ் - பாவேந்தர் பாசறை - 2003
  • நாடகத்துறை சான்றிதழ் - சவகர்லால் நேரு இளைஞர்க் கழகம் - சென்னை கிளை - 1976
  • புதுவை அரசின் கலைமாமணி விருது - 2007

மேற்கோள்கள்[தொகு]

  1. "திண்ணை: மொழிபெயர்ப்பாளர் ச.மதனகல்யாணி மறைவு". Hindu Tamil Thisai. 2023-05-14. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதனகல்யாணி&oldid=3719291" இலிருந்து மீள்விக்கப்பட்டது