உசாகி சூறாவளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசாகி சூறாவளி (Odette)
Typhoon (JMA scale)
Category 5 (சபிர்-சிம்ப்சன் அளவு)
உச்சவேகத்தில் சூறாவளி உசாகி (செப்டம்பர் 20, 2013)
தொடக்கம்செப்டம்பர் 16, 2013 (2013-09-16)
மறைவு23.09.2013
உயர் காற்று10-நிமிட நீடிப்பு: 205 கிமீ/ம (125 mph)
1-நிமிட நீடிப்பு: 260 கிமீ/ம (160 mph)
தாழ் அமுக்கம்910 hPa (பார்); 26.87 inHg
இறப்புகள்33 (மொத்தம்)
சேதம்$529 மில்லியன் (2013 US$)
பாதிப்புப் பகுதிகள்
2013 பசிபிக் சூறாவளி பருவம்-இன் ஒரு பகுதி

உசாகி சூறாவளி (Typhoon Usagi) என்பது 2013ம் ஆண்டு வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் பத்தொன்பதாம் வெப்ப மண்டல நிலையில் உருவான, உலகம் முழுவதுக்குமே அதிக பயத்தை உருவாக்கிய மிகக் கடுமையான வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். செப்டம்பர் 16 இல் பிலிப்பீன்சு அருகில் உருவாகி செப்டம்பர் 19 இல் அதிக வலுப்பெற்று செப்டம்பர் 21ல் பலவீனமடைந்து சீனாவின் குவாங்டாங் அருகில் கரையைக் கடந்தது.

வளிமண்டலவியல் வரலாறு[தொகு]

பிலிப்பீன்சின் கிழக்கு பகுதியான லுசானில் செப்டம்பர் 15 இல், வெப்ப சலனம் அல்லது குறைந்த அழுத்த பகுதி உருவானது. இதை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) ஒரு வெப்பமண்டலம் உருவாகியுள்ளதென உறுதிசெய்தது.[1][2] இதனை செப்டம்பர் 16 இல் கூட்டு சூறாவளி எச்சரிக்கை மையமும் (JTWC) உறுதி செய்தது.[3] இதற்கு முதலில் பிலிப்பீன்சின் உள்ளூர் பெயரான Odette என்று பெயர் ஒதுக்கப்பட்டது.[4] அதே நாளில் இது வெப்பமண்டல சூறாவளியாகத் தரமுயர்த்தப்பட்டு, "உசாகி" (Usagi) என்று பெயர் மாற்றப்பட்டது.[5] இச்சூறாவளி 10 நிமிடத்திற்கு 205 கிமீ வேகத்தில் (125 மைல்) வீசியது. அதன்பின் செப்டம்பர் 20 ம் தேதி, உசாகி 75 கிமீ (47 மைல்) வேகத்தில் வீசியது.

பாதிப்பு[தொகு]

பிலிப்பைன்ஸ் வடகிழக்கு அரோரா மாகாணத்தில் பயணிகள் படகு கவிழ்ந்து மூழ்கியதால் 20 வயதான பெண், 50 வயது மனிதன் உட்படப் பலர் காணாமல் போனார்கள். கேத்தே பசிபிக் ஏர்வேஸ் ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் 360 விமானங்கள் 6 மணி நேரம் 21 செப்டம்பர் அன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தது. தைவானில், 3000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம்-புரண்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டனர். மற்றும் சீனாவில் 25 பேர் இறந்ததாக சீனா அறிவித்தது.

மேற்கோள்[தொகு]

  1. "Marine Weather Warning for GMDSS Metarea XI 2013-09-15T18:00:00Z". WIS Portal – GISC Tokyo. Japan Meteorological Agency. Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
  2. "Tropical Cyclone Advisory for Analysis and Forecast 2013-09-16T00:00:00Z". WIS Portal – GISC Tokyo. Japan Meteorological Agency. Archived from the original on 2013-09-19. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
  3. "Tropical Cyclone Formation Alert". Joint Typhoon Warning Center. Archived from the original on 19 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 September 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. "Weather Bulletin Number ONE Tropical Cyclone Alert: Tropical Depression "ODETTE"". PAGASA. Archived from the original on 20 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "Prognostic Reasoning for Tropical Depression 17W (Seventeen) Warning Nr 01". Joint Typhoon Warning Center. Archived from the original on 19 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 September 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உசாகி_சூறாவளி&oldid=3574917" இலிருந்து மீள்விக்கப்பட்டது