மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் அவர்களுடைய சமூக மேம்பாடு சார் வேலைகளுக்குமாக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

மட்டக்களப்பில் ஆரம்பத்தில் கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் உருவாக்கப்பட்டு ஈழப்போர்க் காலத்தில் அவ்வமைப்பு இயங்காமல் போய்விட்டது, அதன் பின்னர் மட்டக்களப்பு இளம் ஊடகவியலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இயங்காது போனது. மட்டக்களப்பு மாவட்ட மூத்த ஊடகவியலாளர்கள் சிலர் சுடப்பட்டும், சிலர் நாட்டைவிட்டு ஓடியும் உள்ள நிலையில் தற்போதுள்ள இளம் ஊடகவியலாளர்கள் இந்த ஒன்றியத்தினை ஆரம்பித்துள்ளனர்.

நிருவாகக்குழு[தொகு]

ஆரம்பத்தில் இவ்வமைப்பின் ஆரம்பகாலத் தலைவராக எஸ். பேரின்பராஜாயும், உப தலைவராக எல். தேவஅதிரனும் செயற்பட்டார்கள். 2013 செப்டம்பர் 13 இல் புதிய நிருவாகக் குழு தெரிவாகியது. புதிய தலைவராக இ. பாக்கியராஜா தெரிவு செய்யப்பட்டார். இவர் வீரகேசரியின் மண்டூர் செய்தியாளராக இவர் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார். உப தலைவராக சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டார்.