கும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கா தேவி கும்பத்துடன்

கும்பம் (Sanskrit: कुम्भ),என்பது ஒரு முழுமையான குடம், அல்லது ஜாடி ஆகும். இதைக் கலசம் என்றும் கூறுவர். இந்து மதப் புராணங்களில் இது கருப்பை எனும் அர்த்தத்துடன் குறிப்பிடப்படுகிறது. இது மனிதர்களின் வாழ்வாதாரம், வளம், வாழ்க்கை, இனப்பெருக்க சக்தி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது எனவும் குறிக்கின்றன. இந்து மதத்தின் தொன்மவியல் மற்றும் வேதங்களில் உள்ள பல குறிப்புகளில் மனிதன் கும்பத்தில் (கருப்பையில்) இருந்து பிறந்தான் என சொல்லப்படுகிறது. புராண காலத்து முனிவரான அகத்தியர் கருவின் (கும்பத்தின்) வெளியே பிறந்தார் என்று கூறப்படுகிறது. மங்கல விழாக்கள், சமய விழாக்கள் மற்றும் சடங்குகளில், கும்பத்தில் (பானைகளில்) நீரையும், இலைகளையும் நிரப்பி அலங்கரிக்கின்றனர். இந்தச் சடங்குகள் பழங்காலம் முதல் இன்றுவரை வழக்கத்தில் இருந்து வருகின்றன.

இந்திய ஜோதிடத்தில் கும்பம் ஒரு ராசியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணத்தில் வரும் இராவணனின் தம்பியின் பெயரான கும்பகர்ணன், கும்பத்தின் பெயராலேயே குறிப்பிடப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Darian 2001, ப. 125 Quote: The Kumbha: After the Makara, Ganga's most distinctive sculptural feature is the full vase, first appearing with the river goddess on the same Varaha cave frieze from Udaygiri. Although not common in the early stages of the Ganga image, the full vase appears more and more frequently as the Ganga theme reaches maturity.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பம்&oldid=2134100" இலிருந்து மீள்விக்கப்பட்டது