முல்லையூரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முல்லையூரான்
பிறப்புமுருகேசு சிவராசா
(1955-03-27)27 மார்ச்சு 1955
வற்றாப்பளை, முல்லைத்தீவு, இலங்கை
இறப்புஏப்ரல் 21, 2006(2006-04-21) (அகவை 51)
டென்மார்க்
இருப்பிடம்டென்மார்க்
கல்வியாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

சாவகச்சேரி டிறிபேக் கல்­லூ­ரி­
சாவகச்சேரி இந்துக் கல்லூரி

வற்­றாப்­பளை உரோமன் கத்­தோ­லிக்கப் பாட­சா­லை
பணிஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர், இதழாளர்
பெற்றோர்முருகேசு, சிவபாக்கியம்

முல்­லை­யூரான் (முருகேசு சிவராசா, 27 மார்ச் 1955 - 21 ஏப்ரல் 2006) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

முல்லையூரான் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு, வற்றாப்பளை எனும் ஊரில் முருகேசு, சிவபாக்கியம் ஆகியோருக்குப் பிறந்தவர். வற்­றாப்­பளை உரோமன் கத்­தோ­லிக்கப் பாட­சா­லை, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்­லூ­ரி­ ஆகியவற்றில் கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் மலையகத்தில் பண்டாரவளை நகரில் சிலகாலம் ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றி­னார். 80களில் தமிழ்நாடு சென்று அங்கிருந்து 1986 இல் புலம்பெயர்ந்து டென்மார்க் சென்றார்.[1]

எழுத்துப்பணி[தொகு]

கவி­ஞ­ரா­கத் தன்னை அறிமுகப் படுத்திய முல்லையூரான் இலங்­கையில் என் சித்­தப்பா (1981), போர் காற்று (1982) ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் 1980 இல் அக்கினிக் குஞ்சு என்ற பெயரில் ஓர் இதழையும் வெளியிட்டு வந்தார்.[2] 1980களில் தமி­ழ­கத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழம் எழுந்து வரு­கி­றது. குங்­குமம், புதிய அலைகள் ஆகி­ய­ புதின நூல்களை எழுதி வெளியிட்டார். 1993 இல் டென்பார்க்கில் நிர்­வாண விழிகள் என்ற கவிதை நூலை வெளி­யிட்டார். காகம் என்ற பெயரில் மாத இத­ழ் ஒன்றையும் 1996 வரை வெளியிட்டு வந்தார்.[1] இவ்விதழில் அவர் நெடுங்கதைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

2002 ஆம் ஆண்டில் மல்­லிகைப் பந்தல் வெளி­யீடாக சேலை என்னும் இவரது சிறுகதைத் தொகுதி வெளிவந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 துயர் பகிர்தல்: முல்லையூரான் முருகேசு சிவராஜா, வீரகேசரி, செப்டம்பர் 14, 2013
  2. இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள், கோப்பாய் சிவம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லையூரான்&oldid=3904505" இலிருந்து மீள்விக்கப்பட்டது