பேச்சு:நோயறிதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணர்குறிகள் நல்ல சொல். மெய்ப்பாடு என்றும் சொல்லலாம். மெய்ப்பாடு என்பது symptoms தான். நோய்க்குறிகள் என்றும் சொல்லலாம். இன்றுள்ள தமிழ் அறிவில் விளங்காவிட்டாலும், நாடுதல் என்பது diagnostic research என்னும் சிறப்புப்பொருள் கொண்ட ஒன்று. குற்றம் நாடி, குணம் நாடி, நோய் நாடி, என்பதில் எல்லாம், முறைப்படி அலசித் தேர்ந்து என்பது பொருள். இதில் எந்தவொரு முறையற்ற சாய்வும் (bias) இல்லாமலும் இருக்க வேண்டும். நாடுதல் என்பது இதனை வலியுறுத்தும் ஒரு சொல். நடு > நாடு. பொதுவாக நாம் சொல்லும் நட (walk) என்பது, தமிழர்களுக்கு ஒரு அரிய உணர்வு. நடத்தல் என்பது முன், பின், பக்கவாட்டில் சாயாமல், நிலை செய்து தம் உடல் எடை நடுவாக இயலுமாறு ஏகுதல். கொடியை நடு என்றால், எப்புறமும் சாயாது நிலை நிறுத்துதல். நடு = centre. தமிழில் நட என்பது balance. நடம், நடனம் என்பது இந்த நட என்பதில் இருந்து வருவது. அறியாதவர்கள் வடமொழி என்று கூறுவர். தமிழில் நடுங்கு என்றால் நடு நோக்கி அலையும் அதிர்வு, நகர்ச்சி. நாடு என்றால் பொதுவாக விரும்பு, ஆனால் நாடு என்றால், அராய்ந்து தேர் (தேர்ந்து கொள்) என்று பொருள். ஆராய்ந்து அமைத்த இடம், ஆராய்ந்து முறைசெய்து நிறுவிய நிலமும் மக்களும் கொண்டது நாடு. நாடினார் என்றால், அறிந்து அணுகினார் என்று பொருள். நாடுதல் என்பது அறிந்து தேர்தல் என்பதால் நாடுதல் என்பது diagnostic and analytic research. Chief senses are centre, balance, not biased, asssess all sides, analytically based, diagnostic (Greek: dia + gnosis = apart, through + inquiry, investigation). --C.R.Selvakumar 13:28, 20 ஜூலை 2006 (UTC)செல்வா

நாடு என்பதன் வேர் மற்றும் கிளைச்சொற்களை அருமையாக அலசியுள்ளீர்கள். :) இதில் தொடர்புடைய வரிகளைக் கட்டுரையில் உள்ள திருக்குறளுக்குப்பின் இணைத்து விடுங்கள். மற்றபடி, நாடு என்ற சொல் இத்தனை வெவ்வேறு சூழல்பொருள் கொண்டுள்ளதால் அதைவிட தற்போதுள்ள தலைப்பையே விரும்புகிறேன். -- Sundar \பேச்சு 13:40, 20 ஜூலை 2006 (UTC)
சுந்தர் எதையும் மாற்றப் பரிந்துரைக்க வில்லை. தொடர்புடைய உரையாடல், அவ்வளவே. நடை, நாட்டம் முதலிய பல சொற்களை விரிக்க வில்லை. நாடு என்பது மிக ஆழமான, அறிவாழமான சொல் என்று காட்டவே எழுதினேன். --C.R.Selvakumar 13:47, 20 ஜூலை 2006 (UTC)செல்வா
ஓ அப்படியா. இருப்பினும் உங்கள் விளக்கத்தில் சில தகவல்கள் கட்டுரையில் உள்ள திருக்குறளுக்குப் பொருத்தமாகத் தான் உள்ளன. -- Sundar \பேச்சு 13:51, 20 ஜூலை 2006 (UTC)
தொடர்பான சொற்களை ஓரிடத்தில் பதித்து வைத்தல் பயனுடையதாகும் என சேர்த்தேன். அறிகுறி என்பதே அறிய வழி தரும் குறிதானே. உணர்குறி என்பது அதுவே. தேர்குறி (தேர்வு செய்ய துணியும் அறிகுறி). இப்படி பல சொற்கள் ஆக்கிக்கொள்ளலாம். நீங்கள் மிகப்பொருத்தமான திருக்குறளை அங்கு சேர்த்திருப்பது மிக அழகு. soc.culture.tamil ல் எழுதிய நாட்களில் என் சிறப்பொப்பம் வள்ளுவம் உயிர்க்குள் இனிக்கும் ஒளிர்த்தேன்.--C.R.Selvakumar 14:08, 20 ஜூலை 2006 (UTC)செல்வா
வள்ளுவம் உயிர்க்குள் இனிக்கும் ஒளிர்த்தேன் - மிக அருமை. ஒரு ஐயம்: ஒளிர் என்ற உரிச்சொல்லுக்கும் தேன் என்ற பெயர்ச்சொல்லுக்கும் இடையே த் என்ற புணர்ச்சிக்குறியைச் சேர்த்துள்ளீர்கள். இது சில வேளைகளில் ஒளிர்த்தேன் என்ற வினைச்சொல் போன்று தோன்றுகிறது. இவ்விடங்களில் புணரச்செய்யாமல் பிரித்த எழுத வேண்டும் என்ற மரபு உள்ளதா? இது போன்ற பல ஐயங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் நேரம் கிடைக்கும்போது இங்கு எழுதுங்கள். பயனுள்ளதாய் இருக்கும். -- Sundar \பேச்சு 14:20, 20 ஜூலை 2006 (UTC)
இதனை இரு விதமாக எண்ணுவது பொருந்தும். ஒளிர்கின்ற தேன் என்று விரித்தால் வினைத்தொகை ஆகும் அப்பொழுது ஒளிர்தேன் ( ஒளிர்கின்ற, ஒளிர்ந்த, ஒளிரும்) தேன். இங்கு வல்லெழுத்து மிகாது. ஒளிர்ச்சியை உடைய (ஒளிர்வுடைய, ஒளிர்வை உடைய) தேன் என்றால் வல்லெழுத்து மிகும். (யானைப்பாகன் என்பது யானையை உடைய பாகன், தாமரைக்குளம், தாமரையை உடைய குளம்) . ஆனால் நான் இங்கு ஆண்டுள்ளது பல பொருள்களை உள்ளடக்கியது (இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் அடங்குமா என அறியேன்). உயிராகிய தேன் உயிர்த்தேன் என்பது போல, ஒளிர்வாகிய தேன் ஒளிர்த்தேன். இதில் உயிர்த்தேன் என்பது உயிர் பெற்றேன் என்பது போலவும், ஒளிர்த்தேன், உய்வு பெற்றேன், ஒளிர்வு பெற்றேன் என்பதும் ஆகும். தமிழ் படித்தேன் என்பதில் படித்த வினை ஒரு பொருள், படியளவு தேன் போன்றது என்பதும் ஒரு பொருள். --C.R.Selvakumar 15:17, 20 ஜூலை 2006 (UTC)செல்வா
விளக்கம் நன்று. நீங்கள் வினைத்தொகையாகப் பயன்படுத்தியதாக எண்ணியிருந்தேன்! பின்னர் ஆகுபெயர் என எண்ணி வரைவிலக்கணம் பார்த்தேன்[1]. பண்புத்தொகை[2] போல் தோன்றுகிறது. "ஒளித்தேன்" (ர் நீக்கி) இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும் போலிருக்கிறது. சுவையான ஆய்வு. :)
"படித்தேன்" என்பதற்கு நீங்கள் சுட்டியுள்ள இரு பொருட்கள் கவியரசு கண்ணதாசனின் "பார்த்தேன் .. இரசித்தேன் .. பக்கம் வரத் துடித்தேன், மலைத்தேன் இவரென மலைத்தேன் ..." என்ற அருமையான பாடல் வரிகளை நினைவு படுத்தியது. :) -- Sundar \பேச்சு 11:05, 21 ஜூலை 2006 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.pudhucherry.com/pages/gram5.html
  2. http://www.pudhucherry.com/pages/gram4.html

நோயறிதல் ??[தொகு]

--Natkeeran 23:23, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆம் அறுதியிடல் என்பது பலதுறைகளுக்குப் பொதுவாக அடிப்படைக் காரணத்தை அறிதல் என்ற பொருளில் உள்ளது. இந்தக் கட்டுரை குறிப்பாக நோய்களை அறியும் முறைபற்றி இருப்பதால் நோயறிதல் என்ற தலைப்புக்கு நகர்த்தவுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 06:41, 10 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நோயறிதல்&oldid=1494296" இலிருந்து மீள்விக்கப்பட்டது