வளர்ச்சியூக்கத் தடுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளர்ச்சியூக்கத் தடுப்பி

வளர்ச்சியூக்கத் தடுப்பி (Somatostatin) என்னும் ஒரு புரதக்கூற்று இயக்குநீரானது "ஜி"-புரதமிணைந்த வளர்ச்சியூக்கத் தடுப்பி-ஏற்பிகளுடனான செயல்விளைவுகள் மூலமாகவும், பல்வேறு இரண்டாம்பட்ச இயக்குநீர்களின் வெளிப்பாட்டைத் தடுப்பதின் மூலமாகவும், அகச்சுரப்பித் தொகுதி சுரப்புகளைச் சீரமைப்பதிலும் நரம்புக் கடத்துமை, உயிரணுப் பெருக்கம் ஆகிய செயற்பாடுகளைப் பாதிப்பதிலும் பணியாற்றுகின்றது. இந்த வளர்ச்சியூக்கத் தடுப்பியானது வளர் இயக்குநீரைத் தடுக்கும் இயக்குநீர் (growth hormone-inhibiting hormone; GHIH) அல்லது வளர்ச்சியூக்க இயக்குநீர் வெளிப்பாட்டைத் தடுக்கும் காரணி (somatotropin release-inhibiting factor; SRIF) அல்லது வளர்ச்சியூக்க இயக்குநீர் வெளிப்பாட்டைத் தடுக்கும் இயக்குநீர் (somatotropin release-inhibiting hormone)[1] எனவும் அழைக்கப்படுகின்றது.

ஒற்றை முன்சார்புரதம் (preproprotein) மாற்று பிளவடைவதால், வளர்ச்சியூக்கத் தடுப்பி இரண்டு செயற்படு வடிவங்களில் உள்ளது: ஒன்று 14 அமினோ அமிலங்களுடனும், மற்றொன்று 28 அமினோ அமிலங்களுடனும் காணப்படுகின்றது[2].

அனைத்து முதுகெலும்பிகளிலும் ஆறு வெவ்வேறான (SS1, SS2, SS3, SS4, SS5, SS6) வளர்ச்சியூக்கத் தடுப்பி மரபணுக்கள் உள்ளன[3]. இத்தகு ஆறு வெவ்வேறான மரபணுக்களும், ஐந்து வெவ்வேறான ஏற்பிகளும் இருப்பதால், வளர்ச்சியூக்கத் தடுப்பியானது பலதரப்பட்ட செயற்பாடுகளைக் கொண்டிருக்க ஏதுவாகிறது[4] மனிதர்களில் இதற்கு ஒரேயொரு மரபணு (SST) மட்டுமே உள்ளது[5][6][7].

மேற்கோள்கள்[தொகு]

  1. Gillies G (1997). "Somatostatin: the neuroendocrine story.". Trends Pharmacol Sci. 18 (3): 87-95. பப்மெட்:9133778. https://archive.org/details/sim_trends-in-pharmacological-sciences_1997-03_18_3/page/87. 
  2. Costoff A. "Sect. 5, Ch. 4: Structure, Synthesis, and Secretion of Somatostatin". Endocrinology: The Endocrine Pancreas. Medical College of Georgia. pp. page 16. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: |pages= has extra text (help); Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. Liu Y, Lu D, Zhang Y, Li S, Liu X, Lin H (2010). "The evolution of somatostatin in vertebrates". Gene 463 (1–2): 21–28. doi:10.1016/j.gene.2010.04.016. பப்மெட்:20472043. 
  4. Gahete MD, Cordoba-Chacón J, Duran-Prado M, Malagón MM, Martinez-Fuentes AJ, Gracia-Navarro F, Luque RM, Castaño JP (2010). "Somatostatin and its receptors from fish to mammals". Annals of the New York Academy of Sciences 1200: 43–52. doi:10.1111/j.1749-6632.2010.05511.x. பப்மெட்:20633132. 
  5. "Entrez Gene: Somatostatin".
  6. Shen LP, Pictet RL, Rutter WJ (August 1982). "Human somatostatin I: sequence of the cDNA". Proc. Natl. Acad. Sci. U.S.A. 79 (15): 4575–9. doi:10.1073/pnas.79.15.4575. பப்மெட்:6126875. 
  7. Shen LP, Rutter WJ (April 1984). "Sequence of the human somatostatin I gene". Science 224 (4645): 168–71. doi:10.1126/science.6142531. பப்மெட்:6142531.