திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவக்கரை
பெயர்:திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவக்கரை
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
தாயார்:அமிர்தேசுவரி, வடிவாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்

திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]

அமைவிடம்[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள சிவலிங்கம் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் முகமுடைய மும்முகலிங்கமாகும். இங்குள்ள இறைவன் சந்திரசேகரன்; இறைவி வடிவாம்பிகை.

சிறப்புகள்[தொகு]

வக்கிரன் வழிபட்ட ஸ்தலம். வலிய கரை (சுற்றி கல் பாறைகள்) உள்ள இடம். வக்ரகாளியம்மன் சிறப்பு. பெருமாள் சந்நிதியும் உள்ளது. வராக நதி எனும் சங்கராபரணி நதியின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 65

வெளி இணைப்புக்கள்[தொகு]