பேச்சு:தெலுங்குத் தாய் வாழ்த்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்பாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டு நானே தமிழ் மொழிபெயர்ப்பை வழங்கியுள்ளேன். தமிழில் அதிகாரப் பூரவ மொழிபெயர்ப்புகள் இதுவரையில் இல்லை. நான் வழங்கியுள்ளது பாடலுக்கான தமிழ்ப் பொருளே, பாடலின் தமிழ்ப் பதிப்பு அல்ல. எனவே, இதை நீக்க வேண்டாம். பொருளை சேர்க்கத் தாமதம் ஆகிவிட்டது, அவ்வளவே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:30, 2 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:07, 2 செப்டம்பர் 2013 (UTC)
இது ஒரு பாடலின் முதல் வரி. பெயர்ச்சொல் போன்றது. எனவே, இதே தலைப்பிலேயே தொடர வேண்டும். என் தெலுங்குத் தாய்க்கு என தெலுங்கில் பாடல் இல்லை. வேண்டுமெனில், தற்போதைய கட்டுரையின் தலைப்பின் பின்னால் தெலுங்குப் பாடல் என சேர்க்கலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:30, 2 செப்டம்பர் 2013 (UTC)
பிற மொழிச் சொல்லின் பெயரில் கட்டுரைத் தலைப்பு இருக்க வேண்டாம் என்பதால், அதற்கு இணையான தமிழ்ச் சொல்லின் பெயருக்கு கட்டுரை நகர்த்தப்படுகிறது. மா தெலுகு தல்லிக்கி என்பது வழிமாற்றாக இருக்கட்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:07, 2 செப்டம்பர் 2013 (UTC)
மென்மையாக கண்டிக்கிறேன். பாடலின் பெயர், பெயர்ச் சொல். எப்படி யூடியூப் என்பது பெயர்ச் சொல்லோ, அது போன்றே இதுவும். தலைப்பு அதே பெயரிலேயே இருக்க வேண்டும். மேலும், ”என் தெலுங்கு தாய்க்கு” என்ற தலைப்பு பொருந்தவும் இல்லை. ஏற்பில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:12, 2 செப்டம்பர் 2013 (UTC)
தமிழ்க்குரிசில், தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. யூடியூப் என்பது ஒரு நிறுவனத்தின்/ அமைப்பின் பெயர் அதை நாம் மாற்றாமல் இருக்கலாம். ஆனால், அதை இதனுடன் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? கிரிக்கெட் என்பதைத் தமிழில் “துடுப்பாட்டம்” என்று மாற்றம் செய்துதான் கட்டுரை இருக்கிறது. ”என் தெலுங்குத் தாய்க்கு” என்பது நானாக வைத்த தலைப்பில்லை. தாங்கள் கட்டுரையின் தொடக்கத்தில் “மா தெலுகு தல்லிக்கி” என்பதற்கு தமிழ்ப் பொருள் ”என் தெலுங்குத் தாய்க்கு” என்று குறிப்பிட்டதை வைத்துத்தான் அத்தலைப்பு இடம் பெற்றிருக்கிறது. தமிழ்க் கட்டுரைகளில் பிற மொழிச் சொற்களிலான தலைப்புகளைத் தவிர்ப்பது நல்லது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:07, 2 செப்டம்பர் 2013 (UTC)
ஜன கண மன என்பதைப் போல இதையும் இதே பெயரில் வைக்கலாம். தமிழ்த் தலைப்பிற்கு மாற்றவேண்டுமெனில் பொருத்தமான தலைப்பு வேண்டும். தெலுங்குத் தாய் வாழ்த்து என்று குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். மாற்றாக, என்/எங்கள் தெலுங்குத் தாய்க்கு (தெலுங்கு/ஆந்திரப் பண்) எனக் குறிப்பிட்டால் பெயர்ப் பொருத்தம் குறையும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:21, 2 செப்டம்பர் 2013 (UTC)
இந்தப் பாடலின் சிறப்பு என்ன?--Kanags \உரையாடுக 08:14, 2 செப்டம்பர் 2013 (UTC)
இது ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலப் பண்ணாக ஏற்பு பெற்றிருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், தெலுங்கர்கள் முதன்முதலில் மொழிவாரி மாநிலப் பகிர்வுக்கு குரல் கொடுத்தனர். அப்போது இப்பாடல் முக்கியத்துவம் பெற்றது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:17, 2 செப்டம்பர் 2013 (UTC)
ஆனால் கட்டுரையில் நீங்கள் தந்துள்ள தகவல் ஏதும் இல்லையே? வெறுமனே ஒரு தெலுங்குத் திரைப்படப் பாடல் என்றே தரப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்களைத் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:52, 3 செப்டம்பர் 2013 (UTC)