டால்டன் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுக்களைப் பற்றிய அறிவு ஈராயிரம் ஆண்டுகளாக கிரேக்க மற்றும் இந்திய தத்துவவாதிகளால் அறியப்பட்டு இருந்தாலும் அறிவியல்பூர்வமாக டால்டன் எனும் ஆங்கில பள்ளி ஆசிரியர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கையை விளக்கினார். அவர் கருத்துப்படி எல்லாப் பொருட்களும் அவையவைகளின் அணுக்களால் ஆனது; ஒரு பொருளின் அணுக்கள் யாவும் ஒரே நிறம், நிறை, பருமனளவு கொண்டவையாக உள்ளன; அணுக்களைப் பிளக்க முடியாது; வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் மாறுபட்டு இருக்கின்றன; வேதிமாற்றத்தின் போது இப்படிப்பட்ட அணுக்களின் சேர்க்கையே நிகழ்கின்றன; அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. இவை டால்டன் கொள்கை (Dalton's Theory) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டால்டன்_கொள்கை&oldid=1489234" இலிருந்து மீள்விக்கப்பட்டது