கோமல் அன்பரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோமல் அன்பரசன் என்பவர் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள கோமல் கிராமத்தில் பிறந்தவர். 11வது வயதில், துணுக்கு எழுத்தாளராக எழுத்துத்துறைக்கும், பத்திரிகைத்துறைக்கும் அறிமுகமானவர். பள்ளியில் படிக்கும் போது, 14வது வயதில், “கவின்” என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தினார். கல்லூரியில் படித்தபோது 19வது வயதில், தனது முதல் புத்தகமான “சூரியப்பார்வைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதினார்.[1]

படிக்கும்போதே ஊடகத்துறையில் கால்பதித்த கோமல், அப்போதிலிருந்து பல்வேறு சிற்றிதழ்களிலும் , இலக்கிய இதழ்களிலும், வெகுமக்கள் இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஊடகப்பணி மட்டுமின்றி, கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் என பல தளங்களிலும் இயங்குபவர். 'காவிரி' என்ற அமைப்பை உருவாக்கி காவிரி டெல்டா மாவட்டங்களில் நற்பணிகளைச் செய்து வருபவர்.[2] மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி 'மாயூர யுத்தம்' என்ற இயக்கத்தைத் தொடங்கியவர்.[3]

இயற்றிய நூல்கள்[தொகு]

  • 60 நாட்களில் அரசியல்
  • காவிரி அரசியல் - தமிழகம் வஞ்சிக்கப்பட்ட வரலாறு
  • தமிழ்நாட்டு நீதிமான்கள்
  • செய்திகள்…நிஜமும், நிழலும்
  • மாண்புறும் மக்கள்
  • தென்கச்சி - கதை ராஜாவின் கதை
  • மாயூர யுத்தம்
  • வேலை வேண்டுமா?
  • சூரியப்பார்வைகள்
  • அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு...
  • அறிவோம் மயிலாடுதுறை
  • கலாநிதி மாறன்[4][5]
  • கொலை கொலையாம் காரணமாம்[6]
  • 20 ஆம் நூற்றாண்டில் சாதித்த தமிழர்கள்
  • ரகசியமான ரகசியங்கள்
  • தமிழ்நாட்டு கொலை வழக்குகள் - பாகம் 1
  • தமிழ்நாட்டு கொலை வழக்குகள் - பாகம் 2
  • ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்?

ஊடகவியல்[தொகு]

மக்கள் தொலைக்காட்சியில் 2007ஆம் ஆண்டுமுதல் தலைமை செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 2012இல் தலைமை செயல் அதிகாரியாகப் பணி உயர்வு பெற்றார். முன்பு அத்தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக பணிபுரிந்தவர். அதற்கு முன்பு தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான சன் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் 5 ஆண்டுகள் முக்கிய பொறுப்பிலிருந்தவர்.[7] பிறகு 2017இல் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் மேனேஜிங் எடிட்டராகப் பணியாற்றினார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோமல் வாழ்க்கைக்குறிப்பு". KOMAL ANBARASAN (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  2. "காவிரி குழுமமும், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம்... ஆர்வம் காட்டிய இளைஞர்கள்!". nakkheeran (in ஆங்கிலம்). 2020-08-09. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  3. Kan, Arsath (2020-12-28). "மயிலாடுதுறை மாவட்டத்துக்காக போராடிய 'மாயூர யுத்தம்' இயக்கம்... கால் நூற்றாண்டு கால கனவு நிஜமானது..!". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  4. "விஜயாபதிப்பகம் கோமல் அன்பரசன் - புத்தகங்கள்". பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "nhm.in/". பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "விகடன்.காம் கோமல் அன்பரசன் - புத்தகங்கள்". பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2015.
  7. "Makkal TV promotes Komal Anbarasan as CEO - Exchange4media". Indian Advertising Media & Marketing News – exchange4media (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  8. Bureau, Adgully. "Komal Anbarasan joins News 7 as Managing editor". www.adgully.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமல்_அன்பரசன்&oldid=3583657" இலிருந்து மீள்விக்கப்பட்டது