பேச்சு:இயற்கை மீள்மம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

rubber என்பதன் ஒலிப்பு \ˈrə-bər\ என்பதாகும். நாம் தமிழில் இரபர் என பகரத்தை ஒற்று சேர்த்து வலித்து எழுதாமல் இருக்கலாம். இறபர் என்றாலும் ஏலும். ஆங்கிலத்தில் இரண்டு b இருப்பதால் தமிழில் தவறாக ரப்பர் என இரட்டித்து எழுதுகின்றனர். இயற்கை மீள்மம் என்பது பொருத்தமாக இல்லை. மீள்மம் என்பது elastic material என்பது சரியானதுதான். ஆனாலும் இங்கே elasticity என்பதுபோன்ற பண்புப்பொருள் சுட்டுவதாகவும் இருக்கின்றது. இயற்கை மீள்மம் என்னும் பொழுது, ஏதோ இயற்கையே மீள்வது போன்ற பொருள் சுட்டுகின்றது. இரபர் என்பதும் தேய்த்தல், உரசுதல் போன்ற பொருளில்தான் பயன்படுத்தினார்கள். கரிக்கோடுகளை அழிக்கப் பயன்படும் அழிப்பானாக முதலில் இந்திய இரபர் (India rubber) என 1788 இல் பயன்படுத்தினார்கள். பிற பொருள்கள் ஆங்கிலத்தில் பின்னர் தோன்றின. நாம் இரபர் என்றே எழுதலாம். தமிழ்ச்சொல் வேண்டுமெனில் மீளி எனலாம். இயற்கைய மீளி எனலாம். இயற்கை இரபர் அல்லது இயற்கைய மீளி என்பது பொருந்தலாம்.--செல்வா (பேச்சு) 17:53, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

இது குறித்து யாரும் கருத்துரைக்காததால், இயற்கைய மீளி அல்லது இயற்கைய மீண்மி எனப் பெயரிடலாமா? --செல்வா (பேச்சு) 00:31, 16 மே 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயற்கை_மீள்மம்&oldid=3431756" இலிருந்து மீள்விக்கப்பட்டது