விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா மன்றம் என்பது பள்ளி/கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான மன்றமாகும். இந்த மன்றம் விக்கிப்பீடியா மற்றும் அதன் பிற திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், விக்கிப்பீடியா திட்டங்களுக்கான பங்களிப்புகளை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது.

  • இம் மன்றத்தை பள்ளி/கல்லூரி மாணவர்கள் தாமாகவோ அல்லது ஆசிரியர்கள் துணையுடன் ஒருங்கிணைக்கலாம்.
  • இம் மன்றத்தைத் தொடங்க விக்கிப்பீடியாவிடம் இருந்து அனுமதி எதுவும் பெறத் தேவை இல்லை.
  • பள்ளி அல்லது கல்லூரியில் விக்கிப்பீடியா மன்றம் தொடங்க விரும்புபவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
  • உங்கள் சந்தேகம்/வேண்டுகோள்களை இப்பக்கத்தில் பதிவு செய்யலாம்.

அமைக்கப்பட்ட மன்றங்கள்[தொகு]

  1. திருவட்டாறு எக்செல் பள்ளிகளின் விக்கிப்பீடியா மன்றம்