மரகதப் பச்சை நத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரகதப் பச்சை நத்தை
பச்சை நத்தையின் ஓடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
Gastropoda
தரப்படுத்தப்படாத:
clade Heterobranchia

clade Euthyneura
clade Panpulmonata
clade Eupulmonata
clade Stylommatophora

informal group Sigmurethra
பெருங்குடும்பம்:
Helicoidea
குடும்பம்:
Camaenidae
பேரினம்:
Papustyla
இனம்:
P. pulcherrima
இருசொற் பெயரீடு
Papustyla pulcherrima
ரென்ச்சு, 1931
வேறு பெயர்கள்

Papuina pulcherrima

மரகதப் பச்சை நத்தை (emerald green snail) அல்லது பச்சை மர நத்தை (green tree snail) அல்லது மானுசு பச்சை மர நத்தை (Manus green tree snail), அறிவியல் பெயர்: Papustyla pulcherrima) என்பது அளவில் பெரிய மர நத்தை ஆகும். இது உயிரியல் அடிப்படையில் கேமேனிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் ஓடு பொதுவாக மற்ற நத்தைகளில் காணப்படாத பச்சை நிறத்தில் இருப்பதால் இவை அணிகலன்கள் செய்வதில் பயன்படுகின்றன. மேலும் ஓடுகளைச் சேகரிப்பவர்களாலும் விரும்பி வாங்கப்படுகின்றன. இந்த நத்தைகளின் அழிவுக்கு இவை ஒரு காரணமாக உள்ளன. இப்போது இந்த நத்தை வகை அச்சுறுத்தப்பட்ட உயிரனங்களின் பட்டியலில் உள்ளது.

மானுசு பச்சை மரநத்தைகள்
மானுசு பச்சை மரநத்தையின் ஓடு

இந்த நத்தைகள் பப்புவா நியூ கினியில் உள்ள மானுசுத் தீவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை மரத்தில் வாழும் தன்மையுடையன. மழைக்காடுகளில் கடல்மட்டத்தில் இருந்து 112 மீட்டர் உயரத்தில் இவை காணப்படுகின்றன.

இவற்றின் பச்சை நிறம் ஓட்டின் கால்சியம் கார்பனேட்-ஆல் ஆன உட்பகுதியில் இருப்பதில்லை. ஓட்டின் மேலே உள்ள புரத அடுக்கிலேயே உள்ளன. இதற்குக் கீழே இதன் நிறம் மஞ்சள் ஆகும்.

மேற்கூறிய காரணங்கள் தவிர காடுகள் அழிப்பும் இந்த உயிரினத்தின் அழிவுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

இவ்வகை நத்தைகளும் அவற்றின் ஓடுகளும் சைட்சு (CITES) எனப்படும் அருகிவரும் உயிரினங்களுக்கான பன்னாட்டு சாசனம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன.[2]. இவ்வகை உயிரினங்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் அருகிவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mollusc Specialist Group 1996. Papustyla pulcherrima. In: IUCN 2008. 2008 IUCN Red List of Threatened Species. <www.iucnredlist.org>. Downloaded on 20 July 2013.
  2. CITES species database பரணிடப்பட்டது 2013-07-20 at Archive.today. Accessed 20 July 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரகதப்_பச்சை_நத்தை&oldid=3792929" இலிருந்து மீள்விக்கப்பட்டது