அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி
குறிக்கோளுரைகற்றனைத்தூறும் அறிவு
வகைஅரசினர் இருபாலர் கல்லூரி
உருவாக்கம்1964
முதல்வர்எல். பிரதாபன்
அமைவிடம், ,
இணையதளம்www.gtmc.edu.in

அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி (Govt. Thirumagal Mills College) தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் நகரத்தில் உள்ளது. இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரி, 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[1]. இக்கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டக் கல்லூரியாகும். கா. அ. சண்முக முதலியார் என்பவர் தானமாகக் கொடுத்த 47 ஏக்கர் இடம் மற்றும் 5 லட்ச ரூபாய் நிதி மூலம் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[2]

வழங்கும் படிப்புகள்[தொகு]

காலை 9.00 மணி முதல் பிற்பகல் 01.10 வரை முதலாவது சுழற்சியும், பிற்பகல் 01.20 முதல் 05.30 வரை இரண்டாவது சுழற்சியும் வகுப்புகள் நடைபெறுகிறது.

இளநிலைப் படிப்புகள்[தொகு]

எண் பாடப்பிரிவுகள் தொடக்கம் சுழற்சி குறிப்புகள்
1 கணிதம் 1965-66 சுழற்சி 1
சுழற்சி 2
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி
2 பொருளியல் 1965-66 சுழற்சி 1 ஆங்கில வழி
3 தாவரவியல் 1969-70 சுழற்சி 1
சுழற்சி 2
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி
4 இயற்பியல் 1969-70 சுழற்சி 1 தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி
5 வேதியியல் 1980-81 சுழற்சி 1
சுழற்சி 2
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி
6 வணிகவியல் 2005-06 சுழற்சி 1 ஆங்கில வழி
7 தமிழ் 2012-13 சுழற்சி 1 தமிழ் வழி
8 ஆங்கிலம் 2012-13 சுழற்சி 1 ஆங்கில வழி
9 கணினி அறிவியல் 2012-13 சுழற்சி 1 ஆங்கில வழி
10 கணினி பயன்பாட்டியல் 2013-14 சுழற்சி 1 ஆங்கில வழி
11 வரலாறு 2013-14 சுழற்சி 1 ஆங்கில வழி
12 விலங்கியல் 2013-14 சுழற்சி 1 ஆங்கில வழி

பட்ட மேற்படிப்புகள்[தொகு]

ஆராய்ச்சி படிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Govt. Thirumagal Mills College". பார்க்கப்பட்ட நாள் 2013-07-28. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. GOVERNMENT THIRUMAGAL MILLS COLLEGE self study report