மாக புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாக புராணம் [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீர ராம பாண்டியன் என்பவரால் பாடப்பட்ட நூல். மாசி மாதத்தில் நீராடுவதை 'மாகஸ்நானம்' என்று கொண்டாடுவது வழக்கம். இந்த நீராட்டு விழாப் பற்றிய கதைகளைக் கூறுவது மாக புராணம். இது வடமொழிப் 'பாத்ம புராணம்' [2] புராணமஎன்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளதாம். அந்த நூலிலிருந்து இந்தத் தமிழ்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதில் 12 கடவுள் வாழ்த்துப் பாடல்களும், 1412 புராணச் செய்திப் பாடல்களும் உள்ளன. [3] மாசி மாதம் ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து காவிரி போன்ற புதுப்புனலில் நீராடும்போது இந்த நூல் ஓதப்பட்டதாகத் தெரிகிறது. கலித்துறைப் பாடல்கள், துதிப் பாடல்கள், சந்தப் பாடல்கள், உலக நீதிகள், வருணனைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

பாடல் - எடுத்துக்காட்டு [4][தொகு]
ஊனம் இல்லாக் கல் கோடு உரிய புதல்வர் நல்க மதி
ஈனம் இல்லாப் பெருஞ்செல்வம் எல்லாம் எளிதில் தர வேண்டி
ஆன குடகில் பிறந்தாயே, அரங்கற்கு இயல்பாம் ஆரணங்கே
கான மலர் சேர் காவிலியே, கையால் தொழுவோம் கண்டாயே. [5]
கால காலனைக் கயிலை யாளியை
பால லோசனப் பரம தாணுவைச்
சூல பாணியைத் தொழுத அன்பன்மேல்
ஏல வந்த கூற்று ஏது செய்யுமே [6]
குருவம் மா மருது புன்னை கோங்கு வேல் கடம்பு வள்ளி
மரவம் கூவிளம் இரத்தி வெள்ளிவால் மாதுளங்கம்
அரசு பாதிரி செருந்தி அங்கோலம் மகருகந்தம்
சுரபுன்னை குடசம் வேங்கை மராமரம் சூரை காரை [7]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 53. 
  2. 18 புராணப் பட்டியலில் இரண்டாவது புராணம் பாத்ம புராணம்
  3. விருதுப்பட்டி இராமலிங்கக் குருக்கள் இதனை 1904-ல் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்
  4. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை
  5. காவிரியாற்றைத் தொழும் பாடல் (துதி 6-3)
  6. கூற்றுவனால் ஒன்றும் செய்யமுடியாது எனக் காறும் பாடல் (18-17)
  7. மர வகைகளை அடைமோழி இல்லாமல் அடுக்கிக் கூறும் பாடல் (21-9)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக_புராணம்&oldid=1457546" இலிருந்து மீள்விக்கப்பட்டது