ஆஷ்டன் அகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஷ்டன் அகார்
Ashton Agar
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆஷ்டன் சார்ல்சு அகார்
பிறப்பு14 அக்டோபர் 1993 (1993-10-14) (அகவை 30)
மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா
உயரம்1.93 m (6 அடி 4 அங்)
மட்டையாட்ட நடைஇடக்கை ஆட்டக்காரர்
பந்துவீச்சு நடைஇடதுகை மரபுவழா சுழல்
பங்குஅனைத்து வகைப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 434)சூலை 10 2013 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013மேற்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி
2013பேர்த் ஸ்கோர்ச்சர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் பஅ
ஆட்டங்கள் 1* 11* 2
ஓட்டங்கள் 98 336
மட்டையாட்ட சராசரி 98.00 39.45
100கள்/50கள் 0/1 0/4 –/–
அதியுயர் ஓட்டம் 98 98
வீசிய பந்துகள் 60 1,778 142
வீழ்த்தல்கள் 0 31 5
பந்துவீச்சு சராசரி எ/இ 30.16 18.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 எ/இ
சிறந்த பந்துவீச்சு 0/24 5/65 3/51
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 3/– 0/–
மூலம்: CricketArchive, 11 சூலை 2013

ஆஷ்டன் அகார் (Ashton Charles Agar, பிறப்பு: 14 அக்டோபர் 1993) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். இவர் இடதுகை மரபுவழா சுழல் பந்து வீச்சாளரும், கீழ்-ஒழுங்கு மட்டையாளரும் ஆவார். தனது முதலாவது பன்னாட்டுத் தேர்வுத் துடுப்பாட்டத்தை இங்கிலாந்து அணிக்கு எதிரான 2013 ஆஷசுத் தொடரில் ஆடி முதலாவது ஆட்டத்திலேயே 11வதாக விளையாடி 101 பந்துகளுக்கு 98 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். அத்துடன், 10வது இலக்குக்கான அதிகபட்ச கூட்டு-ஓட்டங்களையும் எடுத்து உலக சாதனை படைத்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் பிறந்த[1] அகாரின் தாயார் இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவர். தந்தை ஓர் ஆத்திரேலியர்.[2][3]

சர்வதேச போட்டிகள்[தொகு]

சூன், 2013 ஆம் ஆண்டில் ஆஷ்டன் அகர் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆத்திரேலிய அ அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இவருடன் பவாத் அகமது என்பவரும் இடம்பெற்றார். இவர் பாக்கித்தான் ஏதிலி ஆவார். இவர் ஜூலை , 2013 இல் ஆத்திரேலிய குடியுரிமையைப் பெற்றதனால் ஆத்திரேலிய அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[4][5] பின் ஆஷ்டன் அகர் 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் அறிமுகமானார்.[6] இந்தத் தொடரில் ஆத்திரேலிய அணி இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க எண்ணியதால் நேத்தன் லியோனுக்கு அடுத்தபடியாக இவரை தேர்வு செய்தது.[7] ஆத்திரேலிய அ அணியில் சிறப்பாக செயல்பட்டதால் இவரை டெண்ட்பிரிட்ஜ், நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[8] அப்போது இவருக்கு வயது 19 ஆண்டுகள் 265 நாட்கள் ஆகும். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டத்தில் மிக இளம் வயதில் விளையாடிய ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இவர் 12 ஆவது இடம் பிடித்தார்.[9] மேலும் ஆஷஸ் தொடரில் மிக இளம் வயதில் அறிமுகமானாவர் எனும் சாதனையைப் படைத்தார்.[10] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 11 ஆவது வீரராக களம் இறங்கினார். இவர் 101 பந்துகளில் 98 ஓட்டங்களை எடுத்து பல தேர்வுத் துடுப்பாட்ட சாதனைகளை முறியடித்தார். பதினோறாவது வீரராக களம் இறங்கி 50 ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனை, மேலும் அதிக ஓட்டங்கள் அடித்த சாதனை மற்றும் பத்தாவது இணைக்கு இவரும் பிலிப் ஹியூசும் இணைந்து 163 ஓட்டங்கள் அடித்தனர். இதன்மூலம் 10 ஆவது இணைக்கு அதிக ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்தனர்.[11][12]

இந்தத் தொடரின் முதல் இரன்டு தேர்வுத் துடுப்பாட்டங்களில் இவர் விளையாடினார். மேலும் மட்டையாளராகவும் செயல்பட்டார். ஆனால் இவரின் பந்து வீச்சு சிறப்பானதாக அமையவில்லை. முதல்போட்டியின் ஆட்டப்பகுதியில் 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்ற இயலவில்லை. பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 82 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளை மட்டுமே கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது போட்டியின் இரண்டு ஆட்டப் பகுதியிலும் இவரால் இலக்கினைக் கைப்பற்ற இயலவில்லை. இவரின் பந்துவீச்சு சராசரி 124 ஆக இருந்தது. இதனால் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் இவருக்குப் பதிலாக தேர்வுக் குழு நேத்தன் லியோனைத் தேர்வு செய்தது.[13] பின் உடல்நிலை சரியில்லாததனால் இவர் தாயகம் திரும்பினார். பின் 2014-15 ஆம் ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது . இந்தத் தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நேத்தன் லியோன் ஆத்திரேலிய அணியின் பிரதான பந்துவீச்சாளராக இருந்தார்.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashton Agar profile பரணிடப்பட்டது 2013-07-15 at the வந்தவழி இயந்திரம் – Cricket Australia. Retrieved 24 January 2013.
  2. Ali Martin, Just who is Ashton Agar?, த சன், 10 சூலை 2013
  3. Ashton Agar: proud to be of Sri Lankan heritageThe Sunday Times. Published 20 May 2012. Retrieved 24 January 2013.
  4. Australia A Tour to the UK பரணிடப்பட்டது 10 சூலை 2013 at the வந்தவழி இயந்திரம் – Cricket Australia. Retrieved 10 July 2013.
  5. Hustwaite, Megan (2013). Ashton Agar selected in Australia A team to tour British Isles in JuneHerald Sun. Published 24 April 2013. Retrieved 10 July 2013.
  6. Coverdale, Brydon (2013). Ahmed, Agar "Ashes contenders": Inverarity – ESPNcricinfo. Published 19 June 2013. Retrieved 10 July 2013.
  7. Ashton Agar, Fawad Ahmed in line for Ashes call: Nathan LyonThe Australian. Published 8 May 2013. Retrieved 10 July 2013.
  8. Brettig, Daniel (2013). Teenage Ashton Agar handed shock debut – ESPNcricinfo. Published 10 July 2013. Retrieved 10 July 2013.
  9. Smith, Wayne (2013). Teenage spinner Ashton Agar gets shock Ashes callThe Australian. Published 10 July 2013. Retrieved 10 July 2013.
  10. Youngest players on debut for Australia in Test matches – CricketArchive. Retrieved 11 July 2013.
  11. Ashton Agar claims a place in Ashes historyThe Australian. Published 12 July 2013. Retrieved 12 July 2013.
  12. Conn, Malcolm (2013). Ashes: Teenage debutant Ashton Agar scores 98 to swing momentum of first Ashes Test back in Australia's favourHerald Sun. Published 12 July 2013. Retrieved 12 July 2013.
  13. Reuters report பரணிடப்பட்டது 2015-07-23 at the வந்தவழி இயந்திரம், 22 August
  14. Coverdale, Brydon (3 March 2015). "Agar added to squad for Sydney Test" பரணிடப்பட்டது 2017-08-30 at the வந்தவழி இயந்திரம் – ESPNcricinfo. Retrieved 3 March 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷ்டன்_அகார்&oldid=3261873" இலிருந்து மீள்விக்கப்பட்டது