மீண்டெழும் பாண்டியர் வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீண்டெழும் பாண்டியர் வரலாறு
நூல் பெயர்:மீண்டெழும் பாண்டியர் வரலாறு
ஆசிரியர்(கள்):செந்தில் மள்ளர்
வகை:வரலாறு
இடம்:இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:624
பதிப்பகர்:தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்
பதிப்பு:2012

மீண்டெழும் பாண்டியர் வரலாறு - குடிமரபியல் ஆய்வு என்பது செந்தில் மள்ளர் எழுதிய ஒரு வரலாற்றியல் தமிழ் நூல் ஆகும். இந்த நூலை தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் 2012 இல் வெளியிட்டது. இது 624 பக்கங்களைக் கொண்டது.

இந்த நூலை ஆசிரியர் 7 ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு 644 ஆவணங்களை ஆராய்ந்து எழுதியதாகக் கூறியுள்ளார்.[1]

உள்ளடக்கம்[தொகு]

பள்ளர் என்கிற மள்ளர் சமூகத்தினரே தமிழ்நாட்டின் பாண்டியர் ஆட்சியாளர் மரபினர் என்றும், இவர்கள் வடுக படையெடுப்பில் தங்களது பெருவாரியான விளை நிலங்களை இழந்தார்கள் என்றும், தமிழ்ச்சமூக உரிமைகள் நிலையில் அதிகார அழிப்புக்கு ஆளானார்கள் என்றும் வாதிடுகிறது[2]

தமிழ்நாட்டு அரசின் தடையும்/ நீக்கமும்[தொகு]

இந்த நூல் சில குறிப்பிட்ட சாதிகளைப் பற்றி தவறான தகவல்களை முன்வைக்கிறது என்றும், காழ்ப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது என்றும் கூறி இந்த நூலை தமிழ்நாடு அரசு மே 2013 இல் தடை செய்துள்ளது.[2] இந்த நூலை விற்பனை செய்வது, மறுபதிப்புச் செய்வது, மொழிமாற்றம் செய்வது இதனால் தடைபட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் மீது தேசத் துரோகம் குற்றம் சாட்டி வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளது.[3]

இந்தத் தடையை எதிர்த்தும், அரசு தடை செய்துள்ளதைக் குறிப்பிட்டும், அவரும் அவரது குடும்பத்தாரும் ஏராளமான சித்திரவதைகளை எதிர்கொள்வதைக் குறிப்பிட்டும் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியரின் வழக்கறிஞர் வாதிட்டார். தமிழ்நாட்டு அரசு சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் மனு தாக்கல் செய்ய தனக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டதைத் தொடர்ந்து, ஆசிரியருக்கும் குடுபத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[1] மேலும் உயர்நீதிமன்றம் இப்புத்தகத்தின் தடையை 2017/07/22 ஆம் நாள் நீக்கியது. அரசும் இப் புத்தகத்தின் உண்மை தன்மையை ஏற்றுக்கொண்டது.[சான்று தேவை]

எதிர்ப்பும் / புத்தகத்தின் வெற்றியும்[தொகு]

இந்த நூல் தடை செய்யப்பட்டதையும், இந்த நூல் ஆசிரியர் மீது இந்த நூல் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டதையும் மனுஷ்யபுத்திரன், அ. மார்க்சு, பத்ரி சேஷாத்ரி உட்பட்ட எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசில்வாதிகள் கண்டித்துள்ளார்கள். இந்தத் தடையை எதிர்த்து லயோலா கல்லூரியில் கருத்துரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் ஒன்று சூன் 2013 இல் ஒழுங்கு செய்யப்பட்டது. மேலும் இப்புத்தகம் 2017 ஜீலை 22 ஆம் நாள் 4 வருடங்களுக்கு பிறகு தனது தடைகளை எதிர்த்து வெற்றிகொண்டு மீண்டும் வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 மீண்டெழும் பாண்டியர் வரலாறு நூலாசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும்
  2. 2.0 2.1 State bans book claiming Scheduled Caste as original rulers of Tamil land
  3. "எத்தனை தடைகள் வந்தாலும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டே தீருவேன்-செந்தில் மள்ளர்". Archived from the original on 2013-07-30. பார்க்கப்பட்ட நாள் 2013-07-12.