சண்டதாண்டவ மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
சண்டதாண்டவ மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சண்டதாண்டவ மூர்த்தி என்பது சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். உமையம்மை காளியாக மாறி அசுரர்களை வதைத்தபின்பு ஆணவம் கொண்டார். ஆணவத்தினை அழிக்கும் கடவுளான சிவபெருமான் காளியுடன் போரிட்டார். அப்போரில் காளி தோற்றதால், சிவபெருமானை நடன போட்டிக்கு அழைத்தார். நடனத்தின் கடவுளான சிவபெருமான் நடனபோட்டிக்கு ஒப்புக் கொண்டார். மூம்மூர்த்திகளும், தேவர்களும் அந்த நடனப்போட்டியைக் கண்டனர். அப்பொழுது சிவபெருமானின் குண்டலம் தரையில் விழுந்தது. அதைக் காலால் எடுத்து மாட்டி நடனத்தினைத் தொடர்ந்தார். இதனால் காளி தோற்றார். இந்த சிவபெருமானின் திருக்கோலம் சண்டதாண்டவ மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. [1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=780 தினமலர் கோயில்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டதாண்டவ_மூர்த்தி&oldid=1881492" இலிருந்து மீள்விக்கப்பட்டது