பூத தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூத தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்கள் மற்றும் பன்னிரு தாண்டவங்களில்[1] ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த தாண்டவத்தை சிவபெருமா்ன் பேய்களுடன் ஆடுகிறார். இந்தக் கோலத்தை பண்டாரம் என்றும் சொல்கின்றனர். [1]

திருவெண்காட்டில் இந்த பூதநடனத்தை சிவபெருமான் ஆடுகிறார். இந்த திருவெண்காடானது, சுவேதவனம், பிரம்ம மாசானம், ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. [1] பேய்வரி என்றும் இதனை அழைப்பர். [1]

யானை வடிவில் வந்த அரக்கனை கொன்று, யானையின் தோலினை உடலில் போர்த்தி சிவபெருமான் ஆடிய நடனம் பூத தாண்டவமாகும். இந்த தாண்டவம் நவ ராத்திரியின் ஏழாவது நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!".
  2. http://www.maalaimalar.com/2012/10/22133002/9-days-shiva-thandavam.html பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் 9 நாள் சிவதாண்டவம் மாலைமலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூத_தாண்டவம்&oldid=3254713" இலிருந்து மீள்விக்கப்பட்டது