வலைவாசல்:பரதநாட்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பரதநாட்டிய வலைவாசல்
.


அறிமுகம்

ஓம்
ஓம்

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது.

பரதநாட்டியம் பற்றி மேலும் படிக்க...

சிறப்புக் கட்டுரைகள்

கை அசைவுகள் அல்லது முத்திரைகள் (சமசுகிருதம்: ஹஸ்தங்கள்) பரதநாட்டியத்தில் ஒரு முக்கியக் கூறாகும். கை அசைவுகளை பரத நாட்டியத்தில் (சமஸ்கிருதத்தில்) ஹஸ்தம் என சிறப்பாக அழைப்பர். கை என்பதன் சமஸ்கிருத சொல்லே ஹஸ்தம் எனப்படுகிறது. இதை தமிழில் முத்திரை என்பர். பரதநாட்டியத்தில் அடவு,அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது முத்திரைகள் ஆகும். கைவிரல்களின் பல்வேறு நிலைகளாலும் அசைவுகளினாலும் பொருள்படவும், அழகிற்காகவும் அபிநயிப்பதனையே கைமுத்திரை அல்லது ஹஸ்தங்கள் எனக் கூறுவர். பரதத்தில் அபியத்திற்காக பயன்படும் கை அசைவுகளை ஒற்றைக்கை [இணையாக்கை], இரட்டைக்கை [இணைந்த கை] என இரண்டாகப் பிரயோகப்படுத்துகின்றனர்.இவை தவிர்ந்த அபூர்வ முத்திரைகளும் உண்டு.

பரதநாட்டிய கலைஞர்கள்

ராம்லி இப்ராஹிம், (மலாய்: Ramli Ibrahim) (சீனம்: 南利 易卜拉欣), மலேசியாவில் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர். இவர் ஒரு மலாய்க்காரர், இஸ்லாமிய சமயத்தவர். ஆனால், இவர் சமயம், மொழி, கலாசார சார்பற்ற கலைஞர். மலேசிய பரத நாட்டியக் கலை உலகில் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு வயது 58. இவர் கடந்த முப்பது ஆண்டுகளாகக் கலைச் சேவைகளில் ஈடுபட்டு மலேசியாவில் நூற்றுக்கணக்கான பரதநாட்டிய நடன மணிகளை உருவாக்கியுள்ளார். சமய அடிப்படையில் இவருக்கு பல்வேறு கெடுபிடிகள் ஏற்பட்டன. தற்சமயம், ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் (யுனெஸ்கோ) கலைத் தூதுவராகச் சேவை செய்து வருகின்றார்.

சிறப்புப் படம்

பாரதநாட்டியப் பெண்

படத்தில் தட்டுக் கழி, மன்னை ஆகியவை காட்டப்பட்டுள்ளன.தட்டுக் கழி தாளத்தை தட்ட உதவும் கருவியாகும். மன்னை தட்டுக் கழியை தட்ட உதவும்.


தொகுப்பு

பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • பரதநாட்டியம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|பரதநாட்டியம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • பரதநாட்டியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • பரதநாட்டியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • பரதநாட்டியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • பரதநாட்டியம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழர்தமிழர்
தமிழர்
சைவம்சைவம்
சைவம்
இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
இந்தியாஇந்தியா
இந்தியா
தமிழர் சைவம் இந்து சமயம் தமிழ்நாடு தமிழீழம் இந்தியா
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:பரதநாட்டியம்&oldid=3714011" இலிருந்து மீள்விக்கப்பட்டது