வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):வெஞ்சமாக்கூடல்
பெயர்:வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:வெஞ்சமாங்கூடலூர்
மாவட்டம்:கரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கல்யாண விகிர்தேஸ்வரர், விகிர்த நாதேஸ்வரர்
தாயார்:பண்ணேர் மொழியம்மை, மதுர பாஷிணி,விகிர்த நாயகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:விகிர்த தீர்த்தம், குடவனாறு
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

சுந்தரரால் பாடல் பெற்ற இத்தலம் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தொன்நம்பிக்கை[தொகு]

இத்தலத்தில் சுந்தரரின் பாட்டில் மகிழ்ந்த இறைவன் கிழவி வேடம் பூண்டு சுந்தரரின் பிள்ளைகளை ஈடுகாட்டிப் பொன் கொடுத்தார் என்பது தொன்நம்பிக்கை.

பெயர்க்காரணம்[தொகு]

இந்த கோவில் வெஞ்சமன் எனும் வேட்டுவ மன்னனால் கட்டப்பட்டது.மேலும் இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.[1]

வழிபட்டோர்[தொகு]

இது தேவேந்திரன் வழிபட்ட தலமாகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-29.
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 357

படத்தொகுப்பு[தொகு]