தினகரன் (வள்ளல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினகரன் என்னும் வள்ளல் [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரது வள்ளல் தன்மையைப் போற்றித் தினகர வெண்பா என்னும் நூல் பாடப்பட்டுள்ளது. தொண்டை நாட்டுக் கோவூரில் வாழ்ந்தவர். கருணீகர் மரபைச் சேர்ந்தவர். அக்கால அரசனிடம் அமைச்சராக விளங்கியவர். இவரது தந்தை பெயர் வீரையன். களப்பாளர் குலத்தில் தோன்றிய 'மாலை உத்தண்டர்' இவரது உற்ற நண்பர்.

இவரைப்பற்றித் தினகர வெண்பாவில் காணப்படும் செய்திகள்

சைவ சமயத்தவர். எனினும் ஆறு சமயங்களையும் கடந்த 'சிற்பரன்' என்னும் தெய்வநெறியைப் போற்றுபவர்.[2] தேர்த்திருவிழா, சிவபூசை முதலானவை நிகழத் திருப்பணி செய்தவர்.[3]
தனிப்பாடல்கள்[தொகு]

தினகரனைப் போற்றும் தனிப்பாடல்கள் குறிப்பிடத் தக்கவை.

1

கந்தா நின் பேரவையில் சொன்னால் கருந்தமிழும்
செந்தமிழாம் கோவைத் தினகரா - முந்தை நூல்
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அறச்
சொல் தெரிதல் வல்லார் அகத்து.

2

வேடிக்கையான சிவ யோகியர் தீபன் வீறு மைந்தன்
நாடிக் கொள் கீர்த்தித் தினகர பூபதி நற்புலத்தில்
கூடிப் பிரிந்தவர் எங்கே என என்று கோல மதன்
தேடிப் புறப்பட்ட கைப் பந்தமே இச் செழுந் திங்களே.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 55. 
  2. தினகர வெண்பா 120
  3. தினகர வெண்பா 132
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினகரன்_(வள்ளல்)&oldid=2716701" இலிருந்து மீள்விக்கப்பட்டது