சென்சௌ 8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்சௌ 8 அக்டோபர் 31, 2011, அன்று 21:58க்கு ஜியுசுஅன் விண்வெளி ஏவு தளத்திலிருந்து விண்வெளியில் ஏவப்பட்டது. இது மனிதரை ஏற்றிச்செல்லாத சீன விண்வெளிக்கலம். இந்த விண்கலம், 2011 செப்டம்பர் 29 அன்று ஏவப்பட்டு விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த தியன்காங் கலத்துடன் நவம்பர் 3 அன்று இணைந்தது. பின்னர் பிரிந்து மறுபடியும் நவம்பர் 14 அன்று இணைந்தது. இது சீனர்களின் முதலாவது மனிதர்கள் இல்லாத கல இணைப்பு பிரிப்பு முயற்சியானது.

இருந்த பதினெட்டு நாள்களில் பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பூமியை வலம் வந்த பின், நவம்பர் 17, 2011 19:32 உலக நேரத்தின் படி, உள் மங்கோலியாவில் தரை இறங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்சௌ_8&oldid=1582847" இலிருந்து மீள்விக்கப்பட்டது