கள்ளப்புலியூர்

ஆள்கூறுகள்: 12°21′49″N 79°21′52″E / 12.36358°N 79.36449°E / 12.36358; 79.36449
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கள்ளப்புலியூர்
—  கிராமம்  —
கள்ளப்புலியூர்
இருப்பிடம்: கள்ளப்புலியூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°21′49″N 79°21′52″E / 12.36358°N 79.36449°E / 12.36358; 79.36449
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சி. பழனி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கள்ளப்புலியூர் (Kallapuliyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம் ஆகும்.[4][5].

பெயர்காரணம்[தொகு]

செஞ்சியிலிருந்து பென்னகர் வழியாக 16 கி.மீ தொலைவிலும் வளத்தி வழியாக 22 கி.மீ தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. முற்காலத்தில் இவ்வூர் காடுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் கள்ளப்புலியூர் என்ற பெயர் வந்தது என்பதும், இவ்வூரில் களவுத்தொழில் செய்வோர் மிகுந்திருந்ததால் இப்பெயர் வந்தது என்பதும் மரபுவழிச் செய்தியாக நிலவுகிறது.

இவ்வூரின் சிறப்பு[தொகு]

இங்கு மிகவும் பழமைவாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது.[6] அதன் எதிராக சமணர்கள் வழிபடும் பார்சுவநாதர் கோயில் ஒன்றும் உள்ளது. மேலும் செல்லியம்மன், துலுக்கானத்து அம்மன், சிறைமீட்டாள் அம்மன் என்று பல அம்மன் கோயில்களை அமைத்து இவ்வூர் மக்கள் வணங்கி வருகின்றனர். பறையர், நாயுடு, சமணர், நாவிதர், வண்ணார், செட்டியார், வன்னியர் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்வியறிவில் பின்தங்கிக்கிடந்த இவ்வூரில் கல்வி விழிப்புணர்வு தற்போது அதிகமாகக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  6. http://dinamani.com/tamilnadu/article1139389.ece?service=print

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளப்புலியூர்&oldid=3548545" இலிருந்து மீள்விக்கப்பட்டது